2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

புரட்சிகர Camera வடிவமைப்புடன் கூடிய V17 Pro இலங்கையில் அறிமுகம்

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

vivo இன் நவீன ஸ்மார்ட்போனான V17 Pro இன்று இலங்கைச் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முதற்தர மொடலானது V series இற்கான புதிய சேர்க்கையென்பதுடன்,  vivo இன் முன்னோடியான Camera வடிவமைப்பு மற்றும் உலகின் முதற்தர 32 MP dual elevating front camera ஆகியவற்றுடன்  FHD மற்றும் Super AMOLED Ultra FullView™ திரை, தொழில் தர - 48MP AI Quad Camera ஆகிய புரட்சிகர சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

“தற்போதுள்ள V series இல் புதிதாக இணையும் ஸ்மார்ட்போன் தொடர்பில் அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வாடிக்கையாளர்களின் தேவை தொடர்பில் vivo கவனம் செலுத்தும் முன்னோடித் தொழில்நுட்பத்தை V17 Pro வரையறை செய்கின்றது.

எனவே, vivo புதுமையான முயற்சிகளின் முக்கிய அடிப்படைகளில் ஒன்று, எங்கள் ஸ்மார்ட்போன்களில் அடுத்த கட்ட கெமராக்களை உருவாக்குவதாகும். வாடிக்கையாளர்கள் குறைந்த வெளிச்சத்திலும், தெளிவான செல்பிகளை எடுக்க முடியும். இதன்மூலம், வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை V17 Pro வலுவூட்டுகின்றது,” என vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி Kevin Jiang தெரிவித்தார்.

இந்த சாதனமானது 8GB RAM  மற்றும் 128GB  ROM மற்றும் crystal black  நிறத்தில் கிடைக்கப்பெறுகின்றது. நேர்த்தியான மற்றும் ஸ்டைலிஷ் V17 Pro ஒக்டோபர் 2019 முதல் ரூபா. 84,990 என்ற விலையில், ஒரு வருட உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுகின்றது.

vivo V17 Pro, பிரத்தியேக பங்காளர் வலையமைப்பான Dialog Axiata PLC உடன் இணைந்து இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றது, இது தெரிவு செய்யப்பட்ட Dialog Axiata PLC வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையங்களில் கிடைக்கப்பெறுவதுடன், vivo V17 Pro கொள்வனவு செய்யும் Dialog வாடிக்கையாளர்களுக்கு 10 GB இலவச டேட்டா 3 மாதங்களுக்கு கிடைக்கப்பெறும்.

தேசிய  விநியோகஸ்தரான Abans இன் அனைத்து காட்சியறைகள் மற்றும் நாடுபூராகவும் உள்ள அங்கீகாரம் பெற்ற vivo விற்பனையாளர்களிடமிருந்தும்  V17 Pro ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யமுடியும்.

முக்கிய சிறப்பம்சங்கள்

32MP Dual Pop-Up Selfie Camera: எல்லைகளுக்கு அப்பால் படம் பிடியுங்கள்

Dual 32MP மற்றும் Super Wide-Angle Cameras செல்பிகளுக்கு புதிய தோற்றத்தை வழங்குவதுடன் புதுமையான அனுபவத்தை வழங்குகின்றன. Super Wide-Angle Camera அழகான தரைத்தோற்றம் மற்றும் அதிக நண்பர்களை படங்களில் உள்ளடக்கும் பொருட்டு 105° வரை காட்சியை நீடிக்கின்றது.  

Super Night Selfie பட பிரகாசத்தை மேம்படுத்தவும், தெளிவாக மற்றும் பிரகாசமாக உங்களைப் படம் பிடிக்கவும் பல பிரேம்களை ஒருங்கிணைக்கிறது.

48MP AI Quad Rear Camera: தெளிவாக படம் பிடியுங்கள்

அனைத்தையும் 48MP AI Quad Rear Camera மூலம் படம் பிடியுங்கள். இந்த சக்தி வாய்ந்த Camera தொகுதியானது 48MP HD rear camera, 13MP Telephoto, 8MP AI Super wide-angle and Super Macro (2.5cm) மற்றும் 2MP Bokeh cameras ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிறந்த ஒளி உணர்திறன்கொண்ட 48 மெகாபிக்ஸல் Camera தெளிவான மற்றும் பிரகாசமான படங்களை அனைத்து சந்தர்ப்பங்களிலும் உறுதிசெய்கின்றது.

மேம்படுத்தப்பட்ட HDR உங்களது இரவு நேர படங்களுக்கான திறனில் சிறப்பானதை வெளிக்கொண்டு வருகின்றது.  வேகமான செயற்படுத்தல் மற்றும் multi-frame noise reduction technology தொழில்நுட்பத்தின் மூலம் இரவு நேர புதுமைகளை இலகுவாக படம்பிடிக்க முடியும்.

உலகத்தை அருகில் கொண்டு வாருங்கள்

Super Macro mode மூலம் 2.5 சென்ரி மீற்றர் தொலைவில் உள்ள பொருளையும் focus செய்ய முடிவதுடன் வாழ்வின் சிறு அதிசயங்களையும் படம் பிடியுங்கள். V17 Pro வீடியோவிலும் Macro சிறப்பம்சத்தை அனுபவியுங்கள்.

தூரத்தில் உள்ள தரைத்தோற்றத்தையும் 2x Optical Zoom மற்றும் 10x Digital Zoom மூலம் அருகில் இருப்பதை போன்று படம் பிடியுங்கள். 13MP Telephoto Cameraவினால் இனி தூரத்திலுள்ளவற்றை படம் பிடிப்பதற்கு தடையில்லை.

AI Super Wide-Angle Camera

120° பரந்த கோணத்தின் மூலம் உங்கள் படங்களை விரிவுபடுத்துங்கள். இது புதுமைக்கு மேலும் வழி செய்கின்றது.

20:9 Ultra FullView™ Display: Truly Uninterrupted

V17 Pro Super AMOLED 16.36cm (6.44 inches) full-view 91.65% screen-to-body ratio திரையைக் கொண்டுள்ளது. நவீன E3 OLED ஆனது 100% DCI-P3 color gamut பிரகாசமான, உண்மையான நிறங்களை அளிக்கின்றது. பரந்த  20:9 Aspect Ratio மற்றும் மேலிருந்து கீழான super-slim bezels மூலம் V17 Pro உங்கள் பார்வையை எல்லைகளைத் தாண்டி கொண்டு செல்கின்றது.

இந்த ஸ்மார்ட்போனானது 6.44 அங்குல வட்ட வடிவான மூலைகளுடன் கிடைக்கின்றது, இது கலைத்துவம்மிக்கதுடன் சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது. கண்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் V17 Pro இன் திரையானது 61% நீல நிற ஒளியை வடிகட்டுவதுடன் TÜV Rheinland Certification சான்றிதழையும் கொண்டது. இதற்கு மேலதிகமாக, Low Brightness Anti-Flicker technology தொழில்நுட்பமானது இருளில் கண்களுக்கு பாதுகாப்பளிக்கின்றது.

வேகமான நுழைவு, அதிக பாதுகாப்பு

Low Brightness Anti-Flicker தொழில்நுட்பத்தில் vivo முன்னோடியாக உள்ளதுடன், இது தடையற்ற வடிவமைப்பை வழங்கும் பொருட்டு கண்ணுக்கு புலப்படும் fingerprint pad ஐ தவிர்ப்பதுடன், இதன் பொருட்டு பாதுகாப்பு அம்சம் மற்றும் திரையில் எவ்வித சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்த முன்னோடியான தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய V series இன் மூன்றாவது தலைமுறையே V17 Pro ஆகும்.

vivo V17 Pro மேம்படுத்தப்பட்ட fingerprint தொழில்நுட்பத்துடன் வருகின்றது. மேலும் algorithm மேம்படுத்தல்களால் சாதனத்தை 0.39 செக்கன்களில் unlock செய்ய முடியும்.

சீரான செயல்திறன்

நவீன AI சிறப்பம்சங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் V17 Pro Qualcomm’s Snapdragon 675AIE processor with 8GB RAM மற்றும் 128GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன், இது சீரான அனுபவத்தை வழங்குகின்றது.  Funtouch OS 9.1 (based on Android 9) மற்றும் vivoவின் Jovi AI Engine ஆகியவற்றின் மூலம் CPU மற்றும் நினைவக வளங்களை பல சிக்கலான செயல்பாடுகளை செயற்திறன்மிக்க வகையில் கையாளும் பொருட்டு ஒதுக்கீடு செய்கின்றது.

Dual-Engine Fast Charging & Bigger Battery

V17 Pro அதிசக்தி வாய்ந்த 4,100mh பற்றரியையும், மின்னேற்றத்தின் பொருட்டு Type-C, Dual-Engine Fast Charging technology (18W) ஐக் கொண்டுள்ளது.

Optimized Game Mode for Ultimate Gaming Experience

சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு vivoவின் Multi-Turbo acceleration தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.   

vivo பற்றி

vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது.

தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valley ஆகிய 7 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .