2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் பயணிகளுக்கான ‘சவாரி’ செயலி அறிமுகம்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதோர் ஆரம்பமாகச் சவாரிப் போக்குவரத்துச் செயலி (Savari Grand App Launch ) வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கல்லடியில் Maxmetrics Vetures (P) Ltd இயக்குநர் தேவதாசன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தச் செயலியை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியனின் 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பும் மற்றும் தேவதாசன் மயூரனின் Maxmetrics Ventures (P) Ltd இன் மூல துணை நிறுவனமான Myooou Cyber Solutions எனும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய, டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிறுவனமும் இணைந்து இச்சவாரிச் செயலியை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இச் செயலியானது பொதுமக்கள் மற்றும் சாரதிகளை செயலி மூலமாக இணைத்து, போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் இந்தச் சவாரிச் செயலி, மக்களது பாவனைக்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ‘அப்’ ஊடாக, முச்சக்கர வண்டி, கார், வேன் போன்ற வாகனங்களைப் பயணிகள் தங்கள் அலைபேசி செயலி வாயிலாகத் தெரிவுசெய்து, தங்களது இருப்பிடத்தில் இருந்தே விரும்பிய இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X