2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசேட நிகழ்ச்சித்திட்டங்கள்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஜுன் மாதம் 05 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடு முகமாக  மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“உயிர்ப்பல்வகைமை – இயற்கைக்கொரு வாய்ப்பு” எனும் தொனிப்பொருளின் ஊடாக சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சினால் இத்தடவை உலக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையானதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை பல விசேட நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குகின்றது. 

இதற்கிணங்க மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மரநடுகைக் கருத்திட்டங்கள், நாடளாவிய பாடலாக்க மற்றும் புகைப்படப் போட்டி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு கொவிட் - 19 தொற்றுநோய்க் காலப்பகுதிக்குள் கொழும்பு நகரத்தின் சுற்றாடல் இயல்பை வெளிக்காட்டுகின்ற ஒளிநாடாவொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

உலக சுற்றாடல் தினத்தின் நிமித்தம் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சு தனதுஅமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் கூட்டாக இலங்கையிள் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கத்தக்கதாக மரநடுகைக் கருத்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதோடு இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்துக்கம் தனித்துவமான பழமரக் கன்றுகள் பிரதேசத்தின் மதவழிபாட்டு நிலையங்களில் நடுகைசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்போது கேகாலை, மாத்தறை, பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களினதும் மரநடுகைக் கருத்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கிணங்க இந்த மாவட்டங்களில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதவழிபாட்டு நிலையங்களில் உலக சுற்றாடல் தினத்தன்று இந்த பழமரக் கன்றுகளை நடுகைசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

“இலங்கையின் விசித்திரமான உயிர்ப்பல்வகைமை” எனும் தொனிப்பொருளின் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடளாவிய பாடலாக்க மற்றும் புகைப்படப் போட்டிக்காக தீவின் பல்வேறு திசைகளிலிருந்தும் பாடலாக்கங்களும் பெருந்தொகையான புகைப்படங்களும் கிடைத்துள்ளதோடு இன்றளவில் சம்பந்தப்பட்ட சிறந்த ஆக்கங்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் நிலவுகின்ற நடப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த போட்டியை முழுமையான இணையவழி (online) முறையூடாக நடாத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிப் போட்டி முடிவுகள் வெகுசன ஊடகங்கள் மூலமாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் www.cea.lk இணையத்தளம் ஊடாகவும் வெளியிடப்பட உள்ளன.

கொவிட் - 19 தொற்றுக் காலத்திற்குள் கொழும்பு நகரத்தின் சுற்றாடல் தன்மைகள் பற்றி மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் 10 நிமிட ஒளிநாடாவொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு உலக சுற்றாடல் தினத்தன்று உலக சுற்றாடல் தின பிரதான நிகழ்ச்சி நடாத்தப்படுகின்ற மிஹிந்தலை வழிபாட்டுத் தலத்தில் அந்த ஒளிநாடா அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இத்தருணத்திற்கு காணி, காணி அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் திரு. எஸ்.எம். சந்திரசேன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர்நாயகம் திரு. பி.பீ. ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்க உள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--