2020 ஜூலை 11, சனிக்கிழமை

மன்னாரில் கொமர்ஷல் வங்கியின் நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் கரையோரம் நெடுகிலும் கடற்கரையை சுத்தம் செய்வதற்கும், ஆயிரம் வெப்ப மண்டல சதுப்பு நிலத் தாவரங்களை வளர்ப்பதற்கும் தேவையான நிதி உதவி வசதிகளை அண்மையில் கொமர்ஷல் வங்கி வழங்கியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள், வர்த்தக பீடத்தின் பொது நிர்வாகப் பிரிவுக்கு வழங்கப்பட்ட உதவியைத் தொடர்ந்து அதனூடாக இந்தத் திட்டம் அமுல் செய்யப்படடுள்ளது.

மன்னாரை சுத்தம் செய்து பசுமையாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் ஒத்துழைப்போடு அமுல் செய்யப்படும் இந்தத் திட்டத்தை பராமரிக்கும் பொறுப்பும் கடற் படையிடம் ஒப்படைக்கப்படடுள்ளது.  

உலக வனவாழ்வு நிதியத் தகவல்களின் படி வெப்ப மண்டல சதுப்பு நில தாவரக் காடுகள் பவளப் பாறைகளைப் போலவே சுற்றாடல் பொறிமுறையில் பெரும் தாக்கம் செலுத்தக் கூடியவை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .