2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் Huawei ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ஐ.சி.டி துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது “ஸ்மார்ட் நேஷன்” தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும். 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் கைச்சாத்திடும் நிகழ்வில், தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே.பெரேரா, Huawei Technologies Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரியான லியாங் யி ஆகியோர் கலந்துகொண்டனர். 

“Tech4ALL ,இணைப்பு, அப்ளிகேஷன்கள் மற்றும் திறன்கள் ஆகிய மூன்று முன்னுரிமைகள் மீது இது கவனம் செலுத்துகிறது” என்ற அவர், அவற்றை இணைப்பு அடிப்படையில் சேர்க்கும் போது, Huawei தொடர்ச்சியாக செலவீனம் மற்றும் தொடர்பாடல் எல்லை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் தடைகளை குறைக்கும், மற்றும் அப்ளிகேஷன்களின் அடிப்படையில் Huawei சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும்.மேலும், பல்வேறு சமூகங்கள் மற்றும் தொழில்களுக்குக் கூடுதல் அப்ளிகேஷன்களை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும். திறன்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திறன்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற தொழில்துறைகளுடன் Huawei செயற்படும். 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், Huawei விரைவில் மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூட்டு புதுமை ஆய்வகத்தைத் திறப்பதுடன், இது, இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சி பணிகளை எளிதாக்குவதுடன், தொழிற்றுறை தேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க ஒரு தளத்தை வழங்குவது மட்டுமன்றி, அதிநவீன ஐ.சி.டி தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழ் கற்கைநெறிகளை நடத்தும். இதற்கு மேலதிகமாக, இது மாணவர்களுக்கு வழங்கப்படும் தொழிற்றறை பயிற்சி மற்றும் 2016 ஆம் ஆண்டில் Huawei தொடங்கிய ‘எதிர்கால திட்டத்திற்கான விதைகள்’ போன்ற தொடர்ச்சியான ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்தும். 

மேலும் Huaweiஇன் உலகளாவிய சிரேஷ்ட நிபுணர்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படுவதுடன், தொழில்முறை தொழில்நுட்ப சான்றிதழைச் செயல்படுத்த ஆதரவு வழங்கப்படும். ஐ.சி.டி துறையின் மாறிவரும் சந்தை தேவைகள் மற்றும் சவால்களைப் பூர்த்தி செய்ய இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியங்களுக்கு உயர்தர ஐ.சி.டி திறமைகளை வழங்குவதை இந்தப் பயிற்சி திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X