2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சி.பி.எல்லின் விவசாயிகள் கழக வருடாந்த ஒன்றுகூடல்

Super User   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் (சி.பி.எல்.) ஓரங்கமான விவசாயிகள் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் அண்மையில் கந்தலம பகுதியில் இடம்பெற்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கழகத்தின் மூலம் விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதாக அமைந்திருந்தது. இதன் மூலம் கிராமிய அபிவிருத்தி திட்டங்களில் விவசாய சமூகத்தை பங்களிப்புச் செய்வதன் மூலம் அவர்களின் செயற்திட்டங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கும் பொருட்டு இந்த கழகம் நிறுவப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின் அடிப்படையில், கடலை, சோயா அவரை, அரிசி மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளிடமிருந்து சிபிஎல் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் கொள்வனவு செய்கிறது. இந்த கழகத்தின் வெற்றிகரமான செயற்பாட்டின் பின்னணியிலும் சிபிஎல் நிறுவனம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பின்தங்கிய கிராமங்களின் வளர்ச்சியிலும், அபிவிருத்தி செய்வதில் மட்டும் பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் ஈடுபடாமல், விவசாயிகளுடன் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்கிறது. சில சந்தர்ப்பங்களில் இது தற்போது நிலவும் விலை நிலைவரங்களை விட அதிகமாகவே காணப்படும்.

வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹான் ரத்வத்தே கருத்து தெரிவிக்கையில், இந்த விவசாயிகள் கழகத்தின் மூலம் நாம் பின்தங்கிய விவசாயிகளுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது மாத்திரமல்லாது, சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் அவர்களை ஈடுபடச் செய்வதாக தெரிவித்தார்.

 

 

அத்துடன் கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையினால், பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முன்னேற்றமடைய சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆயினும் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலையின் மூலமாக இந்த விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக சிபிஎல் நிறுவனம் நம்புவதாக கூறினார்.

1996 ஆம் ஆண்டு 70 விவசாயிகளின் பங்களிப்புடனும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளுடனும் ஆரம்பிக்கப்பட்ட பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் தொடர்ச்சியான வளர்ச்சியின் மூலம் தற்போது 15000 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மேலும் விவசாயிகள் கழகத்தின் மூலம் இந்தோகம, பஹலவௌ, சேனபுர, கித்துல்ஹிட்டியாவ, புலகொட மற்றும்  பெல்வெஹெர போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


அத்துடன் பிளென்டி பூட்ஸ் நிறுவனம் நாடு பூராகவும் இந்த விவசாயிகள் கழகத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் சிபிஎல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மினேக விக்ரமசிங்க, கந்துலு திய விவசாயிகள் கழகத்துக்கு நிதியுதவியை வழங்குவதை படத்தில் காணலாம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .