Super User / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத்தள சமூகத்துக்கு தொடர்ச்சியாக பல பங்களிப்புகளையும் அனுசரணைகளையும் வழங்கி வரும் எடிசலாட் நிறுவனம், இலங்கையின் முன்னணி விளையாட்டு இணைய சமூக வலையமைப்பான gamer.lk தளத்தின் தொலைத்தொடர்பாடல் பங்காளராக அடுத்த வருடம் முதல் செயற்படுவதற்கு முன்வந்துள்ளது.
இதற்கமைய எடிசலாட் நிறுவனத்தின் ஹங்-அவுட்கள் அமைந்துள்ள கொழும்பு, கண்டி மற்றும்
பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இணையத்தில் போட்டி நிகழ்வுகளை அடுத்த வருடம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஹங்-அவுட் நிலையங்கள் முற்றிலும் இலவசமான முறையில் அமைந்த இளைஞர்களை கவரும் வகையில் இணையதள பாவனை, திரைப்படங்களை பார்வையிடல், வீடியோ மற்றும் இணைய விளையாட்டுகள் விளையாடக்கூடிய வசதிகளை கொண்டு அமைந்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் விளையாட்டு சமூகத்துடன் நீண்ட கால உறவுகளை பேணுவதற்கு வழி கோலுவதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சர்வதேச வலைப்பின்னலில் அங்கம் வகிக்கவும் இது போன்ற நடவடிக்கைகள் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எடிசலாட் நிறுவனத்தின் துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், "இலங்கையின் இணையத் தள விளையாட்டு ஆர்வலர்களுக்கு சர்வதேச ரீதியில் பங்குபற்றி சவால்விடுக்கக் கூடிய ஆற்றல் இருப்பதாக நான் கருதுகிறேன். இத்துறையை பிரபல்யப்படுத்த நாம் முன்வந்துள்ளமையானது எமக்கு பெருமையளிக்கிறது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சைபர் கேம்ஸ் 2010 நிகழ்வின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் அனுசரணையாளராக எடிசலாட் செயற்பட்டிருந்தது.
இந்நிகழ்வு பெரும் வெற்றி பெற்று வரவேற்பைப் பெற்றிருந்தது. எதிர்காலத்திலும் gamer.lk தளத்துக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் மேலும் பல போட்டிகளை நடத்த களம் ஏற்படுத்த முடியுமென நான் எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார்.
ஸ்ரீலங்கா சைபர் கேம்ஸ் 2010 நிகழ்வு அண்மையில் கொழும்பிலும் முதற் தடவையாக கண்டியிலும் நடைபெற்றது. இதில் 1000க்கும் அதிகமான இணைய விளையாட்டு போட்டி ஆர்வலர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் சர்வதேச ரீதியான போட்டியொன்றும் இலங்கையின் அணிக்கும் மாலைதீவுகள் அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago