2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

செலான் பயணிகள் அட்டை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது வீசா அங்கீகாரம் பெற்ற ஒரு முற்கொடுப்பனவு அட்டையான செலான் பயணிகள் அட்டையை (Seylan Travellers’ Card) அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதனால் வெளிநாட்டு பயணம் என்பது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சிரமம் அற்றதாகவும் தற்போது மாற்றமடைந்துள்ளது. 
 
ஐக்கிய அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண்ஸ், யூரோ, சவூதி அரேபிய ரியால் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகிய நாணய அலகுகளில் விநியோகிக்கப்படுகின்ற செலான் பயணிகள் அட்டையானது, உலகெங்கும் உள்ள 30 மில்லியனுக்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களினாலும் 2.2 மில்லியன் வீசா அங்கீகாரம் பெற்ற ஏ.ரி.எம். மையங்களிலும் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. 
 
மிகவும் சிக்கலான தன்மையுள்ள வெளிநாட்டு நாணயத்தை பணமாக கொண்டு செல்லுதல் மற்றும் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட பயணிகள் காசோலைகளை எடுத்துச் செல்லல் போன்ற பாரம்பரிய தெரிவுகளை, தனிச்சிறப்புமிக்க இந்த பயண வழித்துணை வசதி பிரதியீடு செய்கின்றது. இவையனைத்தும் நேர்த்தியான வடிவிலான பயண அட்டையின் ஊடாக கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த பயண அட்டையின் தொகையை நிரப்பிக் கொள்வதற்காக ஐந்து வெளிநாட்டு நாணயங்களுள் ஒன்றினை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்பதுடன் உலகின் எப்பாகத்திலும் உடனுக்குடன் பயன்படுத்தவும் முடியும். 
 
செலான் வங்கியின் தனிப்பட்ட வங்கியியல் பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளரான திஸ்ஸ நாணயக்கார கூறுகையில், 'எம்முடன் வாழும் மில்லியன் கணக்கான இலங்கைப் பிரஜைகளுக்கு இலங்கையில் இவ்வகையான முதலாவது முயற்சியாக திகழும் இவ்வசதியை வழங்குவதையிட்டு செலான் வங்கியைச் சேர்ந்த நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். கடந்த காலத்தைப் போலல்லாது, வெளிநாட்டுப் பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் தன்மையானது ஒவ்வொரு நாளும் மிக வேகமாக அதிகரித்த வண்ணமுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களில் வெளிநாட்டு நாணயம் மிக முக்கியமானதும் இன்றியமையாததுமான பங்கினை வகிக்கின்ற நிலையில், நபர் ஒருவர் சிரமமற்ற பயணத்தை மேற்கொள்வதை உறுதிசெய்யும் விதத்தில் நாம் செலான் பயணிகள் அட்டையினை வடிவமைத்துள்ளோம். அதாவது, ஒருவரது வெளிநாட்டு நாணயம் அனைத்தும் எமது பயணிகள் அட்டையில் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றார். 
 
இந்த செலான் பயணிகள் அட்டையானது செலான் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் வாடிக்கையாளர் அல்லாத நபர்களுக்கும் கூட இலகுவாக கிடைக்கக் கூடியதாகவுள்ளது. உலகெங்கும் இருக்கின்ற ஏ.ரி.எம். மையங்களிலிருந்து இலவசமாக பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் வசதியை இது அளிக்கின்றது. இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் நிறைவுபெற்றதன் பின்னரும் உடனடி குறுந்தகவல் அறிவித்தல் (SMS Alert) குறித்த நபருக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று, தனிநபர் அடையாள குறியீட்டு (PIN) இலக்கத்தால் பாதுகாப்பளிக்கப்பட்ட முறைமை மூலம் இணையத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி மீதி தொடர்பான விபரங்களையும் அறிந்து கொள்ள முடிவதுடன், கொடுக்கல் வாங்கல்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். அதுமாத்திரமன்றி, அமெரிக்க டொலர் 50,000 பெறுமதியான இலவச மருத்துவ காப்புறுதியையும் இது வழங்குகின்றது. இந்த பயணிகள் அட்டையின் தொகையை ஆகக் குறைந்தது அமெ.டொலர் 100 இற்கும், ஆகக் கூடியது அமெ. டொலர் 15,000 இற்கும் நிரப்பிக் கொள்ளலாம். 
 
அட்டைகள் பிரிவு பிரதம முகாமையாளர் நிமேஷ் பெர்ணான்டோ கூறுகையில், 'தமது பணப் பையில் இருக்கின்ற பணத்தின் பாதுகாப்பு குறித்து அல்லாமல்,  தன்னுடைய பயணத்தின் நோக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் தேவையுள்ள வணிக ரீதியிலான பயணிகளுக்கு செலான் பயணிகள் அட்டையானது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கும் அதே மன அமைதியை இது அளிக்கின்றது. இந்த அட்டையின் தொகையை கிரமமான அடிப்படையில் இலங்கையில் இருந்தே இலகுவாக மீள் நிரப்பக் கூடியதாக இருக்கின்றமையால், வெளிநாட்டிலுள்ள மாணவர்கள் தமது பிரத்தியேக வகுப்பு கொடுப்பனவு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இதனைப் பெற்று அவர்களுக்கு கொடுக்கலாம். இதுகாலவரைக்கும் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது கூட செலான் பயணிகள் அட்டையை பயன்படுத்துவது போல மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்திருக்க மாட்டாது. விடுமுறையை கழிப்பவர்களுக்கு முழுமையான சௌகரியம் மற்றும் மன அமைதியை இது கொண்டு வருகின்றது' என்று குறிப்பிட்டார். 
 
(மிக வேகமாக புழக்கத்தை விட்டுப் போகக்கூடிய) பயணிகள் காசோலையைப் போலன்றி, பணத்தை பெறுவதற்கோ அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்கோ  இந்த அட்டையானது தரகுக் கட்டணத்தையோ அன்றேல் அடையாளத்தை உறுதிப்படுத்துவதையோ தேவையாக கொள்ளவில்லை. கொள்வனவு செய்த பின் நாணய தளம்பல்களை குறைத்துக் கொள்ளும். 
 
'முதன்மையான பயணிகள் அட்டை' தொலைந்து போனால் அல்லது களவாடப்பட்டு விட்டால் அவ்வேளையில் பயன்படுத்துவதற்கென ஒரு 'மேலதிக அட்டையை' வழங்குவதன் ஊடாக செலான் வங்கி தனது பயணிகள் அட்டை தொடர்பான சௌகரியத்தை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றது. அதன்மூலம் இப் புதுமையான அட்டையின் பாதுகாப்புசார் சிறப்பம்சங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
குறிப்பிட்ட தொகையொன்று ஒருமுறை நிரப்பப்பட்டால், அட்டை வைத்திருப்பவரின் பயணிகள் அட்டையில் வெளிநாட்டு  நாணய அலகானது காலவரையறையின்றி பேணப்படும். இது ஆறு வருடங்களுக்கு செல்லுபடியானதாக இருக்கும். அதேநேரம், எவ்வித கட்டணமும் இன்றி பிரதியீடு செய்யக் கூடியது என்பதுடன் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் மீள் நிரப்பிக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படும். 
 
'இந்த பயணிகள் அட்டை தொடர்பில் எமக்குக் கிடைத்த பிரதிபலிப்பு கருத்துக்கள் நம்ப முடியாதவையாக இருந்தன. கிடைக்கப் பெற்ற பின்னூட்டல்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால், செலான் பயணிகள் அட்டையை விரும்பிய பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களிடையே அது சந்தேகத்திற்கு இடமின்றி உடனடியான வெற்றியை நிலைநாட்டியுள்ளதை காணலாம். இம் முயற்சிக்காக முன்வந்ததையிட்டும் அதேபோன்று வெளிநாட்டுப் பயணத்தை மேலும் சௌரியமாக, பாதுகாப்பாக மாற்றியமைத்ததையிட்டும் செலான் வங்கி மனத்திருப்தி அடைகின்றது' என்று திஸ்ஸ நாணயக்கார கூறி முடித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--