Editorial / 2020 மே 31 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
'Brain Busters with SLIIT பருவம் 2' தொலைக்காட்சி புதிர் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் அண்மையில் இரத்மலானை ஸ்டெய்ன் ஸ்ரூடியோசில் இடம்பெற்றது.
மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேஷினி எச். ருவன்பத்திரன வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் விலான் சந்தீவ் பண்டார கருணாரட்ன இரண்டாமிடத்தையும், கொழும்பு ஆனந்த கல்லூரியின் சொனால் ரணதுங்க மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் பெறுமதி வாய்ந்த பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், வெற்றிக் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த மாணவர்களின் பாடசாலைகளுக்கும் பெறுமதி வாய்ந்த பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்த இறுதிப் போட்டியின் நடுவர்களாக SLIIT I பிரதிநிதித்துவப்படுத்தி உதித கமகே, அசங்கி ஜயசிங்க, கல்வி அமைச்சின் உதவி பணிப்பாளர் தர்ஷன விஜேசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
வெற்றியாளர்கள் மத்தியில் பேராசிரியர் லலித் கமகே உரையாற்றுகையில்,
“போட்டியிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அறிவை மேம்படுத்தி, ஊக்குவித்து புத்தாக்கமான வாழ்க்கையை மேம்படுத்துவது என்பது SLIIT இன் நோக்கமாகும். கல்வி என்பது ஒரு பயணம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நாம் பயில்கையில், எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உலகில் காணப்படும் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் தொடர்பில் நாம் சிறந்த புரிந்துணர்வை கொண்டிருப்பதன் மூலமாக எம்மால் பொருத்தமான தீர்வை எய்தக்கூடியதாக இருக்கும். எமது பாடசாலை மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு நாம் டீசயin டீரளவநசள புதிர் போட்டியை வடிவமைத்திருந்தோம்” என்றார்.
முதற்சுற்றில் நாடு முழுவதையும் சேர்ந்த 100 க்கும் அதிகமான பாடசாலைகளின் 3,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதிலிருந்து அரையிறுதிச் சுற்றுக்கு 27 உயர் மட்ட பாடசாலைகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த போட்டியின் முக்கியத்தும் பற்றி உதித கமகே குறிப்பிடுகையில், 'எமது பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடப்பு விவகாரம் மற்றும் பொது அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் நாம் 'Bain Busters with SLIIT ' ஐ வடிவமைத்திருந்தோம்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .