2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

Ford EcoSport க்கு J.D. Power விருது

Gavitha   / 2016 மே 31 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

J.D. Power and Associates நிறுவனத்தால் இந்திய ஆரம்ப தர ஆய்வு (IQS) ஒன்றில் உயர் ஸ்தானத்திலுள்ள SUV வாகனமாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டு, Ford EcoSport, மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது. EcoSport தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆய்வை J.D. Power and Associates மேற்கொண்டு வருகின்றது. வியாபார நிறுவனங்களின் மேம்பாடு தொடர்பான முன்னெடுப்புக்களை அமுல் செய்வதில் அறிவுபூர்வமான தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த ஆய்வுகள் நிறுவனங்களுக்கு இடமளிக்கின்றன. முற்றிலும் சுயாதீனமான நடைமுறையின் கீழ், J.D. Power and Associates இன் நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுவதுடன், இதன் பெறுபேறுகள், பல்வேறுபட்ட வாகன உரிமையாளர்களின் கருத்துக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை.

'தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் J.D. Power IQS விருதை வென்றுள்ளமை, எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்க வேண்டும் என்ற எமது ஈடுபாட்டை மீளவும் வலியுறுத்துகின்றது' என்று Ford India நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் விற்பனைகள் மற்றும் பேணல் சேவைகளுக்கான பணிப்பாளரான அனுராக் மெஹ்ரொட்ரா அவர்கள் குறிப்பிட்டார்.  

2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட EcoSport அதன் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பெறுமதி திட்டம் ஆகியவற்றுடன் இந்தியாவில் அதி விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற கச்சிதமான பயன்பாட்டு வாகனப் பிரிவில் தனி முத்திரையைப் பதித்துள்ளது. மோட்டார் வாகனம் ஒன்றின் உணர்வு மற்றும் இயக்கவியல் ஆகியவற்றுடன், SUV வாகனம் ஒன்றை ஒத்த அதன் கனமான தோற்றம் மற்றும் பன்முக திறன்களின் இணைப்பை வழங்குகின்றது. Ford EcoSport இந்தியாவில் Ford உற்பத்தியால் முன்னிலைப்படுத்தப்பட்ட மாற்றத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .