2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

Prime Grand, Ward Place நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

  Prime Group, தனது Prime Grand Ward Place நிர்மாணப் பணிகளை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த #RestartSL நெறிமுறைகளுக்கு இணங்க மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.  

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் தமது உறுதியான பங்களிப்பை வழங்கி வரும் Prime Group, Asia Property Guru விருதுகளில் 2019ஆம் ஆண்டு இலங்கையின் ‘Best Luxury Condo development’ விருது வென்ற ‘Prime Grand’ திட்டத்தின் முக்கிய மைல்கல்லை அண்மையில் கொண்டாடியிருந்தது. ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், இக் குழுமம்  topping off  நிகழ்வை மார்ச் 11ஆம் திகதி நடத்தியிருந்தது.  

இந்தத் திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களான Prime Groupஇன் தலைவர் பிராமனகே பிரேமலால், இணைத்தலைவர்  சந்தமினி பெரேரா, MAGA Engineeringஇன் தலைவர் Capt. M.G. குலரத்ன, DG5இன் தலைவர் சுரஞ்சித் டி சில்வா, CSECஇன் முகாமைத்துவ பணிப்பாளர் சிரோமல் பெர்ணான்டோ, VForm Consultantsஇன் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் ரத்னாயக்க மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

கொழும்பு - 07இல் அமைந்துள்ள ஒரேயோர் உயர் மாடிக் கட்டடமான Prime Grand, 37 மாடிகளுடன், 160 மீற்றர்கள் உயரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் உயரமான பகுதியில் அமைந்த மிக நீண்ட infinity நீச்சல் தடாகத்தைக் கொண்டமையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .