2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

Softlogic Life இனால் ‘பிரீமியர் ஹெல்த் பெனிபிட்’ அறிமுகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான Softlogic Life நிறுவனம், வருடமொன்றுக்கு ரூ. 50 மில்லியன் வரையான நன்மைகளை வழங்கக்கூடிய, இன்று வரை இந்நாட்டின் பாரிய சுகாதார காப்பீடான Softlogic Life Premier Health Benefit ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

குடும்பத்தினரது உடல் நலன் மிக முக்கியமானது எனத் தோற்றுவித்துள்ள சாட்சிகள், ஆய்வுகள் மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அமைவாக, Softlogic Lifeஇன் பாரிய காப்புறுதி, தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் பெற்றுக்கொள்ள கூடிய வகையில், தொழிற்றுறையில் பல முதலாவதாக வழங்கப்படும் நன்மைகளை வழங்குகின்றது.

உலகளாவிய வைத்தியசாலை காப்பீடு மற்றும் பணத் தேவையற்ற உரிமை கோரிக்கை கொடுப்பனவு சேவைகள், வெளிநாடுகளில் பயணிக்கும்போது,  எற்படுகின்ற அவசர நிலைகளின் போது ஒரு பொருளாதார சுமை நிவாரணியாக காணப்படுகின்றது. அவ்வாறான பணத் தேவையற்ற சேவைகள், இலங்கை முழுவதும் Softlogic குழுமத்தின் ஆசிரி மற்றும் சென்ரல் வைத்தியசாலைகளை உள்ளடக்கியதாக 60 வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் மற்றம் அரச வைத்தியசாலைகளில் உள் நோயாளர் மற்றும் நாள் கவனிப்புச் சிகிச்சைகளை வழங்கும் அதேவேளை, பிரிமியர் ஹெல்த் பெனிபிட் பற்சிகிச்சை, சத்திர சிகிச்சை மற்றும் ஆலோசனை, கண் பரிசோதனை, மூக்குகண்ணாடி சட்டகங்கள், சரிபடுத்தும் வில்லைகள், பாமசி செலவுகளின் மீள் செலுத்துகை மற்றும் நலனுடன் இருப்பதற்கான மருத்துவ பரிசோதனைக்கானச் செலவு காப்பீட்டையும் முதன் முறையாக வழங்குகின்றது. 

எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பல் வகைப்படுத்தப்பட்ட பாரிய ஆரோக்கிய சுகாதார நுகர்வோர் பொருட்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள   Softlogic Life நிறுவனம், இந்த மைக்கல்லான காப்புறுதியை வெளியிடுவதில் சந்தோஷப்படுவதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இப்திகார் அஹமட் தெரிவித்தார்.

எமது வாடிக்கையாளருக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார தெரிவுகளை பிரிமியர் ஹெல்த் பெனிட்   (Premier Health benefit) ஊடாக வழங்குவதனால், Softlogic life இன் பிரிமியர் ஹெல்த் பெனிபிட்   (Premier Health benefit) ஆனது சுகாதார காப்புறுதியை நுகரும் காப்புறுதியாளரிடையே ஒரு ஆட்டத்தை மாற்றி அமைக்கும் காரணியாக காணப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .