Super User / 2010 ஜூலை 08 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையுடன் புல்வெட்டும் இயந்திர வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அயோவா மாநிலத்தைச் சேர்ந்த ரொபர்ட் கிறிம்ஸ்டட் என்பவர் நெடுஞ்சாலையொன்றில் புல்வெட்டும் இயந்திரத்தை போதையுடன் அங்குமிங்கும் செலுத்திக்கொண்டிருந்தார்.
அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி சுவாச சோதனை நடத்தியதில் ரொபர்ட் மதுபோதையுடன் இருப்பது தெரியவந்தது. அதனால் அவர் போதையுடன் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
அயோவா மாநிலத்தின் பூன் கவுன்ரி பொலிஸ் அதிகாரியான ரொன் பெஹ்ர் கருத்துத் தெரிவிக்கையில் அயோவில் எந்தவகையான மோட்டார் வாகனத்தையும் மதுபோதையுடன் செலுத்துவது குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரொபர்ட் அதிகபட்சமாக எவ்வளவு வேகத்தில் இவ்வாகனத்தைச் செலுத்தினார் என்பது தனக்குத் தெரியாது எனவும் மேற்படி அதிகாரி கூறியுள்ளார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago