2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மாமியாரை வதைக்கும் மருமகள்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மாமியாரை மருகமளொருவர் சித்திரவதைக்குட்படுத்தும் காட்சிகளடங்கிய வீடியோ இணையத்தளங்களில் வெளியாகி பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோஷாம்பியைச் சேர்ந்த பெண் ஒருவர் முடக்குவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் வயதான மாமியாரை பல காலமாக அடித்து சித்தரவதைக்குட்படுத்தி வந்துள்ளார்.

எதையும் வாய்விட்டு பேச முடியாத நிலையில் இருக்கும் அந்த மூதாட்டி அடி, உதையை வாங்கிக் கொண்டிருந்திருந்துள்ளார்.

இந்நிலையில் மூதாட்டியின் கணவர் மற்றும் மகனுக்கு அவர் தாக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க அவர்கள் மருமகளுக்கு தெரியாமல் மாமியார் இருக்கும் அறையில் சிசிடிவி கெமராவை பொருத்தினர்.

கெமரா விடயம் தெரியாத மருமகள் அந்த அறைக்கு வந்து வழக்கம் போல மாமியாரை தாக்கினார். படுத்தபடுக்கையாக கிடக்கும் அந்த மாமியாரின் முகத்தில் ஓங்கி, ஓங்கி அடித்தார். மேலும் அவரை கட்டிலில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். கீழே விழுந்த மூதாட்டி செய்வது அறியாது கையை தலைக்கு வைத்து அமைதியாக படுத்தார்.

இந்த காட்சிகளடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .