2021 ஜனவரி 23, சனிக்கிழமை

13.59 கோடி ரூபாய் பெறுமதியான மார்புகச்சை

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வைரம், ரூபி, சபையர் மற்றும் அமெதிஸ்ட் போன்ற விலைமதிக்கதக்க 5200 கற்கள் பதிக்கப்பட்டு மலரை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள மார்புகச்சையை அணிந்து வந்த மொடல் அழகி ஒருவர் பார்வையாளர்களை கண்களை சிமிட்டவிடாது வாய்பிளக்க செய்துள்ளார்.

இந்த மார்புகச்சையின் பெறுமதி  13.59 கோடி ரூபாவாகும். 

பிரேசில் நாட்டவரான அலெசான்ட்ரா அம்ப்ரோசியா என்ற 31 வயதுடைய மொடல் அழகியே அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற 'விக்டோரியாஸ் சீக்ரட் ஏஞ்சல்' பெஷன் காட்சியில் இவ்வாறு பங்கேற்றுள்ளார்.

அலெசான்ட்ரா அணிந்திருந்த மார்புகச்சையில் வைரம், ரூபி, சபையர், அமெதிஸ்ட் போன்ற விலைமதிக்க முடியாத கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

அதிக பெறுமதியுடைய இந்த மார்புகச்சையில் மொத்தம் 5200 கற்கள் பதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மலரை போல இந்த மார்புகச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேண்டசி வகை மார்புகச்சை ஒவ்வொரு வருடமும் விதம் விதமாக வடிவமைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றது.

இம்முறை பேண்டசி மாரபுகச்சையானது இரத்தின கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக பெறுமதியான இந்த பிராவை அணிந்து வந்ததை தான் பெருமையாக எண்ணுவதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

கடந்த வருடம் விக்டோரியாவில் இடம்பெற்ற பெஷன் காட்சியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிராண்டா என்ற மொடல் அழகி மேற்படி ரக மார்புகச்சையை அணிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .