2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

14 பெண்கள் மூலம் 15 பிள்ளைகளுக்கு தந்தையான தொழிலற்ற நபர்

Kogilavani   / 2011 நவம்பர் 28 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த நபரொருவர் 14 வெவ்வேறு பெண்கள் மூலம் 15 பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ளதுடன் விரைவில் மேலும் இரு குழந்தைகளுக்கு தந்தையாகவுள்ளார்.

 

34 வயதான தொழில்வாய்ப்பற்ற ஜெமி கும்மிங் என்பவரே இவ்வாறு 15 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

இவரினூடாக கர்ப்பமான 19 வயதுடைய புதிய காதலியான செல்சியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவுள்ளார். அவருக்கு இவ்வாரம் குழந்தை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்னொரு பெண்ணும் கும்மிங்கின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார். அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இக்குழந்தையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வளவு குழந்தைகளுக்கு தந்தையான குமிங் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு  நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

குமிங்கின் தாயான லொரெய்னி இது குறித்து தெரிவிக்கையில், தான் குமிங்கை நினைத்து வெட்கப்படுவதாகவும், குமிங் தனது பிள்ளைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

'அவன் கடந்த பல வருடங்களாக வேலையற்றவனாக இருக்கிறான். அவனிடம் வேலை செய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

எனது மகன் என்ற ரீதியில் அவனில் அன்பு கொண்டுள்ள போதிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. அவன் எனது பிள்ளையென்ற ரீதியில் அவன் மீது அன்புகொண்டுள்ளேன்.  அவன் வாழ்க்கை நிலை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன்' என லொரெய்னி கூறியுள்ளார்.

குமிங்கின் ஏராளமான பெண்களுடன் பாலியல தொடர்கொண்டுள்ளமை குறித்து தாம் கவலை கொண்டுள்ளதாக லொரெய்னின கூறினார்.

1995 ஆம் ஆண்டு குமிங் 17 வயது இளைஞனாக  இருக்கும்போது சமந்தா என்ற குழந்தை பிறந்தது. ஆனால் ஒரு குழந்தை பிறந்தவுடன் குமிங்  கெலி டலி என்ற பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி விட்டாராம்.

இப்போது தனது மூத்த மகளான சமந்தாவை குமிங் பார்ப்பதில்லை என குமிங்கின் தாயார் கூறுகிறார். இப்போது குமிங் சுற்றித் திரியும் பெண்கள் சமந்தாவைவிட அவ்வளவு அதிக வயதானவர்கள் அல்ல என்றும்  லொரைய்னி தெரிவித்துள்ளார்.


  Comments - 0

 • Pramila Thursday, 01 December 2011 10:18 PM

  வேலை இல்லாதவன் என்பதை தானே நிரூபிக்கப் பார்க்கிறான் இந்த மனிதன்..!!!!!!!!!!

  Reply : 0       0

  fanam Tuesday, 29 November 2011 06:05 PM

  அடப்பாவி

  Reply : 0       0

  jude Monday, 09 January 2012 02:49 AM

  ஏனப்பா இந்த வேலை?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X