2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

15 வயது மாணவனுடன் உறவுகொண்ட 57 வயது ஆசிரியை நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயது மாணவனுடன் உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைதான 57 வயதுடைய துணை ஆசிரியை ஒருவருர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேரப்பிள்ளைகளின் பாட்டியான எலேன் மெக்காய் என்ற 57 வயதுடைய பெண்ணே இத்தகைய குற்றத்தை புரிந்துள்ளார்.

இவருக்கு 26 மற்றும் 29 வயதுகளில் மகள்மார் இருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது மூன்றாவது கணவுனுடன் அரைசொகுசு வீடொன்றில் வாழ்ந்து வரும் இப்பெண் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனுடன் பாலியல் உறவை ஏற்படுத்தியுள்ளதுடன் அம்மாணவனுக்கு ஆபாச படங்களையும் காண்பித்துள்ளார்.

இவர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்படும்பட்சத்தில் அவர் தனது கடமையிலிருந்து நீக்கப்படுவார் என பாடசாலை   நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப் பெண் மிகவும் நல்லவர். அவரது இத்தகைய நடத்தை குறித்து கேள்விப்பட்டதுடன் நான் அதர்ச்சியடைந்தேன். இவர்மீது இத்தகைய குற்றம்சாட்டப்பட்டிருப்பது மற்றவர்களுக்கு தெரியாது' என அப்பெண்ணின் அயல் வீட்டார் ஒருவர் தெரிவித்தார்.

இவர், 1,700 மாணவர்களை கொண்ட கிலக்சென் கோஸ்டால் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இங்கு 5 வருடங்களாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'நாங்கள் 57 வயதுடைய அந்த பெண்ணை எமது எமது பள்ளியிலிருந்து கடந்த மே மாதம் இடைநிறுத்தியமையை உறுதிசெய்கின்றோம். மாணவர் ஒருவருடன் தவறான நடத்தையில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் இந்த இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என மேற்படி கல்வி நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • ramm Tuesday, 05 November 2013 06:29 AM

    நல்ல கல்ச்சர்!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .