A.P.Mathan / 2011 ஜூன் 08 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய சமூக வலையமைப்புகளில் பேஸ்புக் (முகப்புத்தகம்) முக்கிய இடத்தினை வகிக்கிறது. நாளுக்கு நாள் இதன் பாவனையாளர்கள் பெருகிக்கொண்டே போகிறார்கள். இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேஸ்புக் நிர்வாகத்தினர் பல சலுகைகளை வழங்கிவருகிறார்கள்.
இப்படியான பிரபல சமூக வலையமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணொருவர் வித்தியாசமான விடயமொன்றை செய்திருக்கிறார். தன்னுடைய பேஸ்புக் நண்பர்கள் 152 பேரையும் கையிலே நிரந்தரமாக பச்சை குத்தியிருக்கிறார். தான் எங்கு சென்றாலும் தன்னுடைய நண்பர்களும் தன்னுடனே சேர்ந்து வரவேண்டும் என விரும்பியதாலேயே கையில் நிரந்தர இடம் கொடுத்திருப்பதாக அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.
சுஷி என தன்னை இனம் காட்டியிருக்கும் நெதர்லாந்தை சேர்ந்த இப்பெண், தான் பச்சை குத்திக்கொண்டமையை வீடியோ பண்ணி பதிவேற்றமும் செய்திருக்கிறார். 152 நண்பர்களையும் தன்னுடைய கையிலே பச்சை குத்திக் கொள்வதற்காக 2 மாதங்களை செலவு செய்திருக்கிறாராம் அப்பெண். இவரது நண்பர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பச்சை குத்திக் கொள்ளவும் தீர்மானித்திருக்கிறாராம்.
நல்லவேளை இவருக்கு 152 நண்பர்கள் மாத்திரம்தான் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்..!



23 minute ago
3 hours ago
siddeek Friday, 10 June 2011 10:29 PM
kaboorukku sendraalum nanbarghalai paarkalaam
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago