2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

175 ரூபா செலவில் திருமணம் செய்துவைக்கும் இயந்திரம்

Kogilavani   / 2011 ஜூலை 14 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வைபவங்களுக்கு லட்சக் கணக்கான ரூபாவை செலவிட வேண்டியிருப்பது குறித்து பலர் கவலையடைகின்ற நிலையில், ஒரு ஸ்ரேலிங் பவுணுக்கு (175 ரூபா) திருமணம் செய்துவைக்கும் ரோபோவொன்று பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கன்செப்ட்ஷெட் எனும் பிரிட்டிஸ் நிறுவனம் வடிவமைத்த இந்த ரோபோ இயந்திரம் 'ஒடோவெட்'  என அழைக்கப்படுகிறது. 
8 அடி உயரத்தைக் கொண்ட இந்த இயந்திரத்தில் ஒரு ஸ்ரேலிங் பவுணை செலுத்தினால் திருமணம் செய்ய விரும்பும் ஜோடிகளுக்கு அது திருமணம் செய்துவைக்கும்.

இந்த இயந்திரத்தில் நாணயத்தை செலுத்தியவுடன் திருமணம் செய்யவிரும்பும் ஜோடிகளிடம் கேள்விகளை கேட்கும். ' உங்கள் துணையை திருமணம் செய்துகொள்ள விருப்பமா?' என ரோபோ கேட்கும்.

இதற்கு பொத்தான்களை அழுத்துவதன் மூலம் பதிலளிக்கலாம். திருமணத்தில் விருப்பம் என்றால் முதலாம் இலக்க பொத்தானை  அழுத்த வேண்டும். விருப்பமில்லை –தப்பிச் செல்ல வேண்டும் என்றால்  2 ஆம் இலக்கத்தை அழுத்தலாம்.

திருமண வகைகளையும் தெரிவு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது, இருபால் திருமணம், ஒரு பால் திருமணம், 'எப்போதும் சிறந்த நண்பர்கள்' ஆகியவற்றில் எதையேனும் திருமண ஜோடிகள் தெரிவு செய்யலாம்.

ஆனால், இந்த இயந்திரம் உண்மையில் பொழுதுப்போக்கான விடயமாகும். இந்த ரோபோவினால் செய்விக்கப்படும் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் திருமண வாழ்க்கையில் பிரச்சினை கொண்ட நபர்கள் பிரிந்துவிட விரும்பினால் இந்த புதுமணத்தம்பதிகள் இந்த பற்றுசீட்டை வைத்திருக்கலாம். ஏனெனில், விவாகரத்து வழங்குவதற்காக மேற்படி நிறுவனம் தயாரிக்கவுள்ள 'ஒட்டோ டைவர்ஸ்' எனும் இயந்திரத்திற்கான கட்டணத்திற்கு 'ஒட்டோவெட்' பற்றுச்சீட்டை காட்டினால் 10 சதவீதம் கழிவு வழங்கப்படுமாம்.


 


  Comments - 0

  • aravinth Friday, 15 July 2011 07:35 AM

    mmm rompa nallam

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .