2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தாயினால் துன்புறுத்தப்பட்ட 2 வயது சிறுவன்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

இரண்டு வயது சிறுவன் ஒருவனை அவனது தாய்  சுவற்றில் நிறுத்தி வைத்து டேப்பினால் சுவற்றுடன் ஒட்டிய சம்பவம் அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தான் வேடிக்கைகாக இவ்வாறு செய்ததாக 18 வயதான அப்பெண்  தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவத்தையடுத்து அதிகாரிகள் அச்சிறுவனை தற்காலிகமாக அவ்வீட்டிலிருந்து விலக்கி வைத்தனர். எனினும்  சில வாரங்கள் கடந்த நிலையில் இப்போது அச்சிறுவன் மீண்டும் தனது தாய் ஜய்லா ஹம்மின் வீட்டிற்குத் திரும்பியுள்ளான்.

அச்சிறுவனை சுற்றி டேப்பினால் ஒட்டப்பட்டு தொங்கும் நிலையிலான புகைப்படங்கள் இவ்வாரம் வெளியாகின. அவை பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. அப்புகைப்படங்கள் சிறுவனது கைகளை சுவற்றில் ஒட்டியதாகவும், கால்களை சுவற்றில் கட்டியதாகவும் காணப்படுகின்றன.

நேப்ரஸ்கா  மாநில சுகாதார திணைக்களத்தின் தலைமையதிகாரி குறிப்பிடுகையில் எதிர்காலத்தில் இவ்வாறான குழந்தை துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக அவ்வீட்டைச்சுற்றி மேற்பார்வை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.

அச் சிறுவனின் தாய் ஹாமிற்கு  கடந்த மாதம் 10 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 2 வருடகால அவளின் முன்னாள் காதலனான 19 வயது இளைஞனுக்கு சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டிற்காக 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .