2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதில் புதிய உலக சாதனை

Super User   / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொது இடங்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையானோர் தாய்ப்பாலூட்டுவதில்  நியூஸிலாந்து பெண்கள் நேற்றுமுன்தினம் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நியூஸிலாந்தின் பல நகரங்களில்  ஷொப்பிங் சென்டர்கள் பலவற்றில் பெண்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டினர்.

இந்நிகழ்வில் மொத்தமாக 1474  பெண்கள் கலந்துகொண்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே போன்றதொரு நிகழ்ச்சியில் 1306 பேர் தாய்ப்பாலூட்டியமை குறிப்பிடத்தக்கது.


நியூஸிலாந்து வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை ஜுலி சேய்மரும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டார்.


பொது இடங்களில் தாய்ப்பாலூட்டும் போது சௌகரியமாக உணர்வதற்கு இந்நிகழ்ச்சி வழி வகுக்கும் என நம்புவதாக சேய்மர் கூறினார்.
"இன்றைய உலகில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவது கடினமானதாக மாறி வருகிறது. குறிப்பாக, இளம்தாய்மார்கள் மிக சங்கடமடைகின்றனர். சவால்களுக்கு மத்தியிலும் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டப்படுவது ஊக்குவிக்கப்பட வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.


ஒரு தடவை வீட்டுப்பாவனைப் பொருள் விற்பனை நிலையமொன்றில் தான் தனது மகனுக்கு தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தபோது பாகாப்பு ஊழியர் ஒருவர் தன்னை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • xlntgson Thursday, 12 August 2010 10:05 PM

  பகிரங்கப்படுத்த கூடாத விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன, இதை பெரிதுபடுத்த தேவையில்லை. ஒருவர் நல்லமனதோடு, போதைபோன்ற நிலையில் இல்லாமல் இருந்தால் இதை கெட்டஎண்ணத்தோடு பார்க்கமாட்டார். யாரோ பார்க்கிறார் என்பதற்கு பயந்து ஒரு பெண் பால் கொடுக்காதிருக்கவும் கூடாது. மனித நாகரிகம் சுய புத்தியை இழந்து தவிக்கக் கூடாது. பெண்ணின் உயரிய தன்மை அவளது தன அமுது தியாகத்தில் தான் ஆரம்பிக்கிறது என்றால் மிகை ஆகாது. அதில், அவளுக்கு சிரமம் எதுவும் இல்லாமல் ஆனந்தத்தையும் இயற்கை வைத்திருக்கிறது. பெண்களை ஆரோக்கியப்பால் பொலிவோடு இருக்க.

  Reply : 0       0

  ANee Monday, 09 August 2010 02:33 PM

  போக போக கணவனுக்கு அல்லது பாய் ப்ரேண்டுக்கும் பாலூட்டும் நிகழ்வும் இடம்பெறும்.

  Reply : 0       0

  ananthasri Tuesday, 10 August 2010 01:38 PM

  குட் லக்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--