Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவை சேர்ந்த காவோ யாங் (Gao Yang) என்ற 37 வயதுடைய நபர், மரங்களுக்கிடையில் கட்டப்பட்ட சிறிய கயிற்றில் சுமார் 7 மணித்தியாலங்கள் நித்திரை செய்து சாதனைக்காக காத்திருக்கிறார். இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் சுமார் 10 அடி உயரத்தில் சிறிய கயிற்றினை கட்டி, அதில் லாவகமாக படுத்து உறங்கும் பயிற்சியை கடந்த 25 வருடங்களாக அவர் மேற்கொண்டு வருகிறார்.
சீனாவின் வடகிழக்கு மாகாணமாகிய லியோனிங்கை சேர்ந்த காவோ யாங், தனது 12ஆவது வயதில் குரு ஒருவரை சரணடைந்தார். அவரிடம் முறைப்படி பயிற்சிகளை கற்றுக்கொண்டார். உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் பயிற்சியை தனது 12ஆவது வயதிலிருந்தே கற்கத் தொடங்கிவிட்டார். கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்ட அவர், இப்பொழுது சாதனைக்காக காத்திருக்கிறார். சிறிய கயிற்றில் நிம்மதியாக உறங்கும் பயிற்சியில் வெற்றிபெற்றிருக்கும் யாங், எதிர்வரும் சில தினங்களில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 hours ago