2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

மிகச் சிறிய உல்லாச ஹோட்டலுக்கு மிகப்பெரிய வரவேற்பு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிகச் சிறிய உல்லாச ஹோட்டலொன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஒற்றை அறை கொண்ட அந்த ஹோட்டல் அண்மையில் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. ஹோட்டல் திறந்த சில மணித்தியாலங்களுக்குள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு தேவையான  வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அதனால் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஹோட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியின் அம்பேர்க் நகரில் அமைந்துள்ள  ஹஸ்வல் எனும் இந்த ஹோட்டலின் அபிமானி ஒருவர் தெரிவிக்கையில் அந்த ஹோட்டலின் பரப்பு மிகவும் சிறியது. ஆனால் அது அதிக ரொமான்ஸ் நிறைந்த பகுதியாக உள்ளது. ஏனென்றால் ஒரு நேரத்தில் ஒரு ஜோடி மாத்திரமே உள்ளே சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

300 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஹோட்டல்  ஏழு அடி அகலத்தை மட்டுமே கொண்டது.  காதல் ஜோடிகளால் இந்த ஹோட்டலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது.

ஹோட்டல் உரிமையாளர் மரினா ஸ்கெரீனர் விபரிக்கையில், எங்கள் ஹோட்டலில் ஒரேயொரு அறை மட்டுமே உள்ளது. ஆனால் ஸ்பா மற்றும் ஆடம்பரக் கட்டில் உட்பட  நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு வசதியும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் 'நாங்கள் இந்த அறையில் தங்குவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிட்டது. ஆனால்  அது மிகவும் பெறுமதியானது. வேறு எந்த ஹோட்டலில், குழப்பமடையக் கூடிய பக்கத்து அறை விருந்தினர்கள் மற்றும் மெல்லிய சுவர் பற்றி கவலையின்றி நீங்கள் மாத்திரம் தனியாக இருக்க முடியும்?' எனத் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .