Kogilavani / 2011 ஜனவரி 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் செங்கற்களால் உருவாக்கப்பட்ட காரொன்றை 80,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.
அக்கார் நூற்றுக்கணக்கான செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது BMW Z4 4 ரக ஆடம்பர காரின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் காரின், கண்ணாடிகளைத் தவிர ஏனைய அனைத்து பாகங்களும் செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
டேய் ஜெங் எனும் இக்கலைஞர், காரின் பகுதிகளை கற்களால் செய்து பின்னர் அப்பாகங்களை பொருத்தியுள்ளார். அதனால் அந்தக் காரின் கதவுகள் திறந்து மூடும் இயல்பை கொண்டுள்ளன.
தென் சீனாவின் குவாங்டோன் மாகாணத்திலுள்ள செங்ஸெங் மாகாணத்தில் இக்கார் தற்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
'நான் இக்காரை ஒருவருட காலத்தை செலவிட்டு தயாரித்தேன். கடந்த வருடம் அதை திறந்து வைத்தேன். இப்போது அதனை விற்பதற்கு முயன்று வருகின்றேன்' என டே ஜெங் தெரிவித்துள்ளார். பூந்தோட்டங்களில் அலங்காரப் பொருளாக வைப்பதற்கு இக் கார் பயன்படும் என அவர் கூறுகிறார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025