Kogilavani / 2011 ஜனவரி 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வானைச் சேர்ந்த ஒருவர் தன்னை, வளர்ப்புப் பிராணியாக வளர்க்கப்படும் மைனா இன பறவையொன்று மோசமாக திட்டுவதால் அதற்கும் அதன் உரிமையாளருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய தாய்வானைச் சேர்ந்த வாங் ஹான் சின் என்பவர் இது தொடர்பாக குறிப்பிடுகையில், தான் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் அயலவர் வளர்க்கும் குறித்த மைனா இனப் பறவையானது தன்னை 'அறிவில்லாத பெரிய வாயுடையவன்' என அழைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பறவையின் வார்த்தைகள் தனது மனதை மிகவும் புண்படுத்துவதாகவும் தனது வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாததால் தான் தீக் காயத்திற்கு உள்ளானதாகவும் வாங் கூறியுள்ளார்.
அதனால் அந்த பறவைக்கு திட்டுவதற்கு கற்றுக்கொடுத்ததாகக் கூறி அதன் உரிமையாளர் மீது அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஆனால் தான் பறவைக்கு அவ்வாறு திட்டுவதற்கு கற்றுக்கொடுக்கவில்லையென அப்பறவையின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கு போதிய சான்றுகள் இல்லாத காரணத்தால் அந்த வழக்கை வழக்குத் தொடுநர்கள் கைவிட்டுள்ளனர்.
26 Oct 2025
26 Oct 2025
xlntgson Friday, 14 January 2011 09:37 PM
ஒரு பாதரும் கிளி வளர்த்தாராம் ஒரு மாமிசக்கடைக்காரரும் கிளி வளர்த்தாராம். பாதரின் கிளி எல்லோருக்கும் கர்த்தரின் ஆசி உண்டாவதாக என்று சொன்னதாம் இறைச்சிக்கடைக்காரரின் கிளி "இறைச்சி, முள் இல்லாமல் வாங்க வேண்டும் இல்லாவிட்டால்...அடிப்பேன் ", என்று கூறியதாம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025