2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

இலவச ஆடைகளுக்காக அரை நிர்வாணமாக விடிய விடிய காத்திருந்த வாடிக்கையாளர்கள்

Kogilavani   / 2011 ஜூன் 17 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வர்த்தக நிலையமொன்று அறிவித்த இலவச வெகுமதிகளைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளாடைகள் மாத்திரம் அணிந்தவாறு அரை நிர்வாணமாக விடியவிடிய காத்திருந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தினத்தில் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் முதல் 100 பேருக்கு இலவச ஆடைகள் வழங்கப்படும் என லண்டன் ரீஜன்ட் வீதியிலுள்ள டேசிகுவல் எனும் வர்த்தக நிலையம் அறிவித்திருந்தது.

காலை 9 மணிக்கு கடை திறக்கப்படவிருந்த நிலையில் முதல்நாள் இரவு 11 மணியிலிருந்து  வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

சுமார் 300  வாடிக்கையாளர்கள் கடும் மழை, குளிருக்கும் மத்தியிலும் உள்ளாடைகளை மட்டும் அணிந்தவாறு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இவர்களில் அதிகமானோர் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையான பெண்களும் வரிசையில் காத்திருந்தனர்.

அவர்களுக்கு எத்தனையாவது ஆளாக வந்தார்கள் என்பதை அறிவதற்காக கழுத்தில் அணிவதற்கான இலக்கமொன்று வழங்கப்பட்டிருந்தது.

அவர்களில் முதல் 100 பேருக்கு குறித்த கடையினால் மேலாடையொன்றும் கீழாடையொன்றும் இலவசமாக வழங்கப்பட்டது. ஏனையவர்களுக்கு 50 சதவீத விலைக்கழிவுடன் ஆடைகள் வழங்கப்பட்டன.

இது குறித்து 22 வயதுடை பெண்ணொருவர் தெரிவிக்கையில், 'நான் இந்த வரிசையில் அதிகாலை 2 மணியிலிருந்து காத்திருந்தேன். இது உண்மையில் ஆச்சரியமானது. சற்று குளிராக இருந்தது. ஆனால் இலவசமாக சில ஆடைகளைப் பெறுவதற்கு இது பெறுமதியானது' என்றார்.


  Comments - 0

 • bis Saturday, 18 June 2011 03:26 PM

  இவர்கள்தாம் நாகரிகமானவர்களாம்!

  Reply : 0       0

  riyas Sunday, 19 June 2011 05:16 AM

  எங்கு பார்த்தாலும் நிர்வாணம் ச்சே!

  Reply : 0       0

  sathik Sunday, 19 June 2011 03:38 PM

  இது என்னே உலகம் இ இதை விட பிச்சை எடுக்கலாம்.

  Reply : 0       0

  Shan Sunday, 19 June 2011 08:11 PM

  நானும் அங்க இருந்திருந்தால் ...........

  Reply : 0       0

  nawas mohammed Sunday, 19 June 2011 08:54 PM

  எங்கே போகின்றது நமது கலாச்சார விழுமியங்கள்.
  இந்த செய்தியை பிரசுரிக்காமல் இருந்தால் தமிழ் மிரரே நல்லது.

  Reply : 0       0

  Jeewan Sunday, 19 June 2011 09:31 PM

  தமிழ் மிரரில் எத்தனையோ செய்திகள் இருக்கு. இந்த மாதிரி செய்தியை மாத்திரம் ஆர்வமா பார்க்குறீங்களா நவாஸ்?

  Reply : 0       0

  vithu Monday, 20 June 2011 03:01 AM

  இந்த கலாச்சாரம் ஸ்ரீ லங்காவிற்கு எப்போது வரும்....

  Reply : 0       0

  kantan Monday, 20 June 2011 05:10 AM

  இவர்களுக்கு மார்க்கம் இல்லையா?

  Reply : 0       0

  suddi Monday, 20 June 2011 09:01 PM

  இலவச ஆடைக்கு அரை நிர்வாணம். என்றால் இலவசமா அதைவிட எதாவது சிறந்தது தருகிறோம் என்றால் இவர்கள் முழு நிரவானமாகவும் நிற்பார்கள். இது அவர்கள் கற்றுகொண்ட கலாச்சாரம். இதற்குதான் சிலர் பெண்ணுரிமை என்கிறாகள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .