Kogilavani / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த குப்பைக் கூடையில் பிரதிவாதியான சிறுவனொருவன் சிறுநீர் கழித்ததன் மூலம் நீதிபதியை ஆத்திரமூட்டிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கோரி வெப் என்ற 17 வயதுடைய சிறுவனே மேற்படிக் குற்றத்தை புரிந்துள்ளான். குறித்த சிறுவன் டெக்ஸாஸ் மாநிலத்தின் டெய்லர் நகரிலுள்ள நீதிமன்றிலிருந்து ஜுரி வெளியேறி சென்றபின் மேற்படிக் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி இளைஞன், தனது காற்சட்டைடையின் இடைப்பட்டியை தளர்த்திவிட்டு குப்பைக் கூடை நோக்கி நடந்துச் செல்வதை அமெரிக்க தொலைக்காட்சியொன்று ஒளிப்பதிவு செய்துள்ளது.
நீதிபதியும் பொலிஸாரும், குறித்த இளைஞனின் செய்கைக்கு கண்டனம் தெரிவிப்பதையும் மேற்படி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
'நீர் எப்படி வளர்க்கப்பட்டீர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் மாவட்ட நீதிமன்றமொன்றில் குப்பைகூடையில் சிறுநீர் கழிப்பது பொருத்தமாற்றது' என நீதிபதி கூறினார்.
சிறுவர் தடுப்பு நிலையமொன்றிலிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இந்த சிறுவன் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
9 minute ago
41 minute ago
1 hours ago
IBNU ABOO Wednesday, 14 September 2011 03:11 AM
குற்றவாளி கூண்டில் நீண்ட நேரம் நின்றிருப்பான். அடக்கமுடியாத இயற்கை ஊற்றெய் வேறு எங்குதான் அகற்றுவான், நல்லகாலம் ....... கழிக்காமல் விட்டான்.
Reply : 0 0
xlntgson Wednesday, 14 September 2011 09:51 PM
gun துப்பாக்கியை நீட்டி விட்டான் நல்ல வேளை ரவை இருந்திருந்தால் வெடித்திருக்கும்!
Reply : 0 0
IFHAM Thursday, 15 September 2011 01:50 AM
கிட்னி வெடிச்சிடும்பா முதல்ல அவன்ட உயிர காப்பாத்துங்க. அவசரப்பட்டு தண்டிசிராதீங்க.
Reply : 0 0
hamaza Monday, 26 September 2011 06:49 PM
என்ன கிட்னில கல்லா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
1 hours ago