Kogilavani / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடம் பெரும் வெள்ளத்தில் உலகம் அழியப் போவதாக நம்பும், சீனாவைச் சேர்ந்த செல்வந்தவர் ஒருவரின் உத்தரவின்பேரில் 30 அடி நீளமான 'நோவாவின் படகு' ஒன்றை வெல்டிங் கலைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.
பைபிளின்படி, உலகெங்கும் பாரிய வெள்ளம் ஏற்பட்டபோது நோவா தயாரித்த படகொன்றில் ஒவ்வொரு உயிரினத்தினதும் தலா ஒரு சோடி அடைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதால் அந்த உயிரினங்கள் ; காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே பாணியிலேயே மேற்படி செல்வந்தரும் தனது குடும்பத்தினருக்காக படகொன்றை உருவாக்கியுள்ளார்.
சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த கோ ஜியான் எனும் இந்த வெல்டிங் கலைஞரான கோ ஜிஹான், எண்ணெய் பீப்பாய்கள் மூலம் இந்த படகை தயாரித்துள்ளார்.
30 அடி நீளமான இந்த படகில் சமயலறை, படுக்கையறை என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீர் புகமுடியாத இந்த அறைகளில் கதவுகள், ஜன்னல்கள் உள்ளன.
உலகளாவிய ரீதியான வெள்ளத்தால் அனைவரும் அழிந்துபோய்விடுவார்கள் என்று கருதும் மேற்படி செல்வந்த வர்த்தகர், தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த படகை தயாரித்துள்ளார்.

13 minute ago
25 minute ago
33 minute ago
38 minute ago
Xuva Monday, 19 September 2011 04:18 PM
இந்த நோவாவின் படகு பற்றி முஸ்லிம்களின் திருக்குர்ஆணிலும் கூறப்பட்டுள்ளது.
Reply : 0 0
rina Wednesday, 21 September 2011 12:15 AM
திருக்குர்ஆனில் நூஹ்(அலை) அவர்களின் வரலாற்றில் இது கூறப்பட்டுள்ளது. இறைவனின் கட்டளைப்படி அவர்கள் அந்தக் கப்பலை உருவாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
33 minute ago
38 minute ago