2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கணவரின் ஆணுறுப்பை துண்டித்து விட்டு தான் நிரபராதி என்று கூறும் பெண்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது கணவரின் ஆணுறுப்பைத் துண்டித்து குப்பை அழிக்கும் இயந்திரத்தினுள் எறிந்த அமெரிக்கப் பெண், தான் குற்றவாளியல்ல என நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தனது கணவர் அத்தண்டனைக்குத் தகுதியானவர் என அப்பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கத்தரினா கியூ எனும் 48 வயதான இப் பெண் குற்றவாளியாக காணப்பட்டால் ஆயுள் தண்டனையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள தனது வீட்டில் இரவு உணவு வேளையின்போது கணவருக்கு உணவில் மயக்க மருந்தை அல்லது நஞ்சை கலந்துக்கொடுத்து மயக்கமடையச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..

அக்கணவர் கண்விழித்து எழும்பும் போது கட்டிலுடன் சேர்த்து கட்டப்பட்டிருப்பதையும் அசைய முடியாமல் இருப்பதையும்  அறிந்துள்ளார்.

அதன்போது அவரது மனைவி சமயலுக்கு பயன்படுத்தும் கத்தியினால் அவரது ஆணுருப்பை துண்டித்து குப்பை அழிக்கும் இயந்திரத்தினுள் எறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து பொலிஸார் அவ்வீட்டிற்குச் சென்றபோது 'அவர் அதற்குத் தகுதியானவர்' என பொலிஸாரிடம் அப்பெண் கூறினாராம்.

கலிபோர்னியா மாநிலத்தின் ஒரேஞ்ச் கவுண்டி நீதிமன்ற நீதிபதி டேப்ரா கெரோலியா சந்தேக நபரான  பெண்ணை ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பிணையில் செல்வதற்கு  அனுமதித்தார்.

குறித்த தம்பதியினர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் புரிந்துள்ளனர். மேற்படி கணவர் தொடர்ச்சியாக தனது ஆண் நண்பர்களை வீட்டிற்கு தங்குவதற்கு அழைத்து வருகின்றமை குறித்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  மனவிரோதத்தில் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்ததாக வழக்குத் தொடுநர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

 • ibnuaboo Saturday, 01 October 2011 02:02 AM

  மற்ற பெண்களுக்கும் இவர் வழிகாட்டியாக இல்லாமலிருந்தால் ஆண்கள் பலர் அதை இழக்காமலிருப்பார்கள்.

  Reply : 0       0

  zamroodh Monday, 03 October 2011 11:56 PM

  மோசமான நண்பர்களை கூட்டிக்கொண்டு வீடுவரை செல்லும் நண்பர்களுக்கு இது ஒரு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கட்டும்.

  Reply : 0       0

  raviraja Friday, 21 October 2011 02:08 AM

  அவள் வெட்டியது சரி. அனால் அதை பயன்படுத்தியிருக்கலாம்.

  Reply : 0       0

  bzukmar Thursday, 29 September 2011 04:52 AM

  தமக்கு பயன்படாததை தோட்டத்தில் இருந்து அகற்றுவது நியதி, அந்த வகையில் தான் செய்ததில் தவறில்லை. தான் நிரபராதி என்று கத்தரீனா எண்ணி உள்ளாரோ?

  Reply : 0       0

  sb Sunday, 02 October 2011 04:36 AM

  நல்லது, புதியது கெடச்சா பழையது தேவயில்ல தானே. இது தானே அவங்க kalaachchaaram, ithilennappa thappu?

  Reply : 0       0

  shuraff Wednesday, 05 October 2011 01:02 PM

  இறைவன் ஆகுமானதே தந்திருக்கும் போது முரண் வலிகளை தேடுபவர்களுக்கு நல்ல பாடம்.

  Reply : 0       0

  Hot water Thursday, 29 September 2011 08:54 PM

  ஆஹா ஆண்களும் பலவீனமானவர்கள்தான்.

  Reply : 0       0

  xlntgson Thursday, 29 September 2011 09:32 PM

  bzukumar களை எடுக்கும் கலை இதுவல்ல. உயிர்த்தலம் என்று அழைக்கப்பட்டது, விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலத்தில்! இதை நீக்கி மனிதன் உயிர் வாழ்ந்துதான் என்ன?

  Reply : 0       0

  nusky Thursday, 29 September 2011 10:00 PM

  இது ஒரு மோசமான செயல். இதை நிறுத்த வேண்டும் என்று நான் கண்டிக்கிறேன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .