2021 ஜனவரி 27, புதன்கிழமை

டி ஷர்ட் வாங்கிய இளைஞனுக்கு எதிராக வழக்கு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி ஷர்ட் வாங்கிய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமின்றி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சாம்ஸ்எலிசீஸ் ஷாப்பிங் பகுதிக்கு சில நாட்களுக்கு முன் 21 வயது இளைஞர் சென்றுள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்ததில் தனக்கு பிடித்தமான டி ஷர்ட் ஒன்றை அவர் கொள்வனவு செய்துள்ளார்.

டி ஷர்ட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது வழியிலேயே இடைமறித்த பொலிஸார், அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததன் பின்னர் வழக்கும் தாக்கல் செய்தனர்.

குறித்த இளைஞனால் கொள்வனவு செய்யப்பட்ட டி ஷர்ட்டின் பின்புறத்தில் அல் கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் பெயர் பதிக்கப்பட்டிருந்தது. ஒஸாமாவின் நினைவாக இளைஞர் ஒருவர் டி ஷர்ட் வாங்குவதாக குறித்த கடையின் ஊழியர் ஒருவரே பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்தே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு தீவிரவாத ஆதரவாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குறித்த இளைஞனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 'விளையாட்டுக்காகவே ஒஸாமாவின் பெயர் போட்ட டி ஷர்ட் வாங்கினேன். இதைவிட மோசமான டி ஷர்ட்களை நான் பார்த்திருக்கிறேன். ஹிட்லர் படம் போட்ட டி ஷர்ட்கள் ஏராளமாக வந்துள்ளன' என்று அவ்விளைஞர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .