Kogilavani / 2011 ஜனவரி 22 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012 ஆம் ஆண்டில் உலகம் அழியப்போகிறதென்பதை தான் நம்புவதாக விண்வெளி தொடர்பான 'ஸ்டார் வோர்ஸ்' எனும் பிரபல ஹொலிவூட் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜோர்ஜ் லூகாஸ் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் நகைச்சுவையாளரும் நடிகருமான சேத் ரொகான் ஆகியோருடனான படத் தயாரிப்பு குறித்த கலந்துரையாடலொன்றில் ஈடுபடும்போதே ஜோர்ஜ் லூகாஸ் இதனை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை லூகாஸ் எந்தளவு நம்புகிறார் என்பதை சேத் ரொஹான், டொரன்டோ சன் பத்திரிகைக்கு விபரித்துள்ளார்.
இது குறித்து ரொஹான் தெரிவிக்கையில், 'ஜோர்ஜ் லூகாஸ் 2012 இல் உலகம் எவ்வாறு அழியப்போகின்றது என்ற விடயம் குறித்து 25 நிமிடங்கள் அலட்சியப்படுத்த முடியாத வகையில் பேசினார். அது உண்மையில் நடக்கப்போகின்றது என்பதை அவர் உறுதியாக நம்புகின்றார்.
அவர் புவித் தட்டுகள் குறித்து பேசினார். ஸ்பில்பேர்க் கண்களை உருட்டி கேட்டுக்கொண்டிருந்தார்.
முதலில் லுகாஸ் வேடிக்கைக்காக சொல்வதாகவே நான் நினைத்தேன். ஆனால் அலட்சியப்படுத்த முடியாத அவரது பேச்சைக் கேட்டவுடன் என்னை நான் சுதாகரித்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினேன்.
நீங்கள் ஜோர்ஜ் லூகாஸாக இருக்கின்றீர்கள். 2012 இல் உலகம் அழியப்போவதாக எண்ணுகின்றீரகள். எனவே ஒருபோதும் உங்களை காப்பாற்றுவதற்கான விண்வெளிக் கப்பல் ஒன்றை நிர்மாணிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் அந்த விண்வெளிக் கப்பலில் எனக்கும் அதில் இருக்கையொன்றை தர முடியுமா? எனக் கேட்டேன்.
அவர் தனது கராஜில் மிலேனியம் பால்கன் (கற்பனையான விண்வெளிக் கப்பல்) ஒன்று விமானியுடன் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும், தானும் ஸ்பில்பேர்கும் நானும் ஏறிச் செல்லலாம் எனவும் கூறினார்' என்றார்.
உலகமானது 2012 ஆம் ஆண்டுடன் அழிவடைந்து விடுமென்ற நம்பிக்கை அமெரிக்க பழங்குடி இனமான 'மாயா' மக்களின் கலண்டரிலிருந்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவுக்கு முன் 3114 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கலண்டரின்படி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதியுடன் உலகம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
j.rizad Tuesday, 25 January 2011 06:26 PM
what a jok hehehhehheheh
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025