2021 மார்ச் 01, திங்கட்கிழமை

முன்னங்கால்களை மட்டும் கொண்ட நாய்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னங்கால்களை மட்டும் கொண்டு வீரநடை போடும் நாயொன்று அமெரிக்காவின் வொஷிங்கடனில் வாழ்ந்து வருகின்றது.

தனது முன்னங்கால்களால் இந்நாசூ புரியும் சாகங்களை கண்டு பலர் வியப்படைந்துள்ளனர்.

டொன்கென் லூ எனும் பெயரை கொண்ட பொக்ஸர் இனத்தை சேர்ந்த நாயே இத்தகைய வீரனாக விளங்கி வருகின்றது.

இந்நாசூ பிறப்பிலேயே ஊனமுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் இந்நாயின் பின்னங்கால்கள் சத்திரசிகிச்சைக்கூடாக அகற்றப்பட்டுள்ளன.

சத்திர சிகிச்சையின் பின்னர் டொன்கென் லூவுக்கு நடக்க முடியாமல் போனது. இந்நிலையில் அதன் உரிமையாளர் அதற்கு தள்ளுவண்டியொன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

டொன்கென் லூவால் தள்ளுவண்டியை சுயமாக பயன்படுத்த முடியவில்லை. தள்ளு வண்டி இருக்கும் போதே அதனை பயன்படுத்தாது தனது முன்னங்கால்களால் பாசூந்து பாசூந்து öŒல்வதற்கு லூ பழகிக்கொண்டது.

இவ்வாறு இரண்டு கால்களில் மட்டும் நடக்க பழக்கிக்கொண்ட இந்நாசூ தற்போது எந்தவித துணையும் இன்றி தனியாக இயங்க கற்றுகொண்டது.

கடற்கரையில் மற்றுமொரு நாயுடன் சமனுக்கு சமனாக ஓடி விளையாடும் காட்சியொன்றை அதனது உரியைமாளர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவை பலர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வீடியோ இணைப்பு  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .