2021 ஜனவரி 20, புதன்கிழமை

உலகில் மிகச்சிறிய பூனை

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலேயே மிகச்சிறிய பூனையென்ற கின்னஸ் சாதனைக்காக கலிபோனியாவைச் சேர்ந்த 5 அங்குல உயரமுடைய பூனையொன்று தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 
பிக்ஸல் என்று பெயருடைய இப்பூனையை கலிபோனியா, பொட்ரியரோவிலுள்ள திவானி என்பவர் தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றார்.

இப்பூனையின் தாயான பிஸ் எனும் பூனை 6 அங்குல உயரத்தை கொண்டு, கடந்த 2012ஆம் ஆண்டில் உலகிலேயே மிகச்சிறிய பூனையென்ற சாதனையை வென்றது.

தற்போது தனது தாயின் சாதனையை முறியடிக்கும் வகையில், இதுவரையில் உலகில் வாழ்ந்திராத மிகச்சிறிய பூனையென்ற சாதனையை இந்த பூனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இப்பூனைiயை நேராக நிற்க வைத்து உயரத்தை அளவெடுத்து கின்னஸ் சாதனை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து இப்பூனையினது உரிமையாளர் அந்நாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
 
மக்களுக்கு பூனைகளை வீட்டில் வளர்ப்பதற்கு விருப்பம் இல்லையாயினும், எங்காவது பூனையொன்றைப் பார்த்தால் அதன் அசைவுகளை கண்டு இரசிப்பதுண்டு. அந்நேரத்திலேயே அவற்றை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் போல இருக்கும்.

வீட்டில் இவ்வாறான சிறிய உயிரினங்கள் இருக்கும் போது எம்மால் வீட்டின் கதவை வேண்டிய அளவுக்கு திறந்து வைக்கவோ அல்லது வேண்டிய நேரத்தில் திடீர் என்று மூடவோ முடியாது.

காரணம், அவை அவற்றின் பொழுதை கழிப்பதற்காக வெளியில் செல்லுதல் அல்லது கதவின் ஓரம் அமர்ந்திருந்து நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருத்தல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வரும். கதவை மூடும் நேரங்களில் அவற்றின் தலை கதவின் முனையில் அடிப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.

வீட்டில் எமது அன்றாட நடவடிக்கைகளின் போது கூட நாம் மெதுவாகவே செயற்பட வேண்டும். பலருக்கு பூனைகளின் கண்கள் நீல நிறமாக இருப்பதும் அதனுடைய வால்கள் வித்தியாசமானதாக இருப்பதனாலும் நகங்கள் கூர்மையானவையாக இருப்பதனாலும் அவை கொடூரமானவை என்று நினைக்கின்றனர்.

அவை பூனைக்கென்று உருவாக்கப்பட்ட மரபணுக்கள். அவற்றின் அமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது என்பதனால் நாம் பூனைகள் பற்றி தவறானதொரு சிந்தனையை வளர்த்துக்கொள்ள கூடாது என்று பூனைகள் பற்றிய ஒரு திடமான கருத்தை திவானி வெளியிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .