2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மின்குமிழ்களை உண்டு ஜீவிதம் தேடும் தந்தை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ரொமேஷ் மதுசங்க

தனது இரண்டு பிள்ளைகளின் வயிற்று பசியை போக்க தனது வயிற்றை காயப்படுத்தி ஜீவிதம் தேடும் நபர் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா?
ஆம், தம்புள்ளை பகுதியை சேர்ந்த நபரொருவர் மின்குமிழ்களை உடைத்து அதனை உணவாக உட்கொண்டு பார்வையாளர்களை பரவசப்படுத்துவதுடன் அவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தைகொண்டு தனது இரண்டு பிள்ளைகளின் வயிற்றுப் பசியை போக்கி வருகின்றார்.

மாத்தளை வீதி, தம்புள்ளையில் வசித்து வரும் பி.கருணாரத்ன என்ற நபரே இத்தகைய அபாயகரமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் 15 வயதிலிருந்து இத்தகைய ஆபத்துமிக்க தொழில்களை செய்து வருவதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பஸ் தரிப்பிடம் மற்றும் பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்களுக்கு செல்லும் இவர், நிலத்தில் விரிப்பை விரித்து அதில் மின்குமிழ்களை உடைத்து கொட்டுகின்றார். பின்னர் அவற்றை ஒரு குவியலாக்கி உணவாக உட்கொள்கிறார். மிகவும் கடினப்பட்டு அவற்றை உண்ணும் இவர், உண்டு முடித்தபின் தண்ணீரை அருந்துகிறார்;.

துண்டுத் துண்டுகளாக இருக்கும் மின்குமிழ்களின் துகள்களின் மீது படுத்து அவற்றை தனது முதுகினால் தூசுக்களாக்குகிறார். பின்னர், இரத்தம் வடிந்த நிலையில் பார்வையாளர்களிடம் சென்று பணத்தை பெறுகிறார்.

'உங்களிடமிருந்து வரும் பணத்துக்காகவே இத்தகைய துன்பத்தை அனுபவிக்கின்றேன். உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என அவர் இதன்போது பார்வையாளர்களிடம் கூறுவது மனதை உருக்கும் காட்சியாக உள்ளது.

'இதனை வேண்டுமென நான் செய்யவில்லை. எனது மனைவி, எனது இரண்டு பிள்ளைகளை வாழ்விக்க வேண்டும். அதற்காகவே இத்தகைய தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன்.  எனக்கு இப்போது 55 வயதாகிறது. 15 வயதிலிருந்து இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றேன். இதுதான் எனது தொழில்' என அவர் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .