2021 மே 12, புதன்கிழமை

கலைநுட்ப கடதாசி ஆடை

Gavitha   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணம் என்பது வாழ்கையில் ஒரு தடவை மாத்திரம் நடைபெறுவது என்பதால், திருமணத்தின் போது திருமண தம்பதிகள் அவர்களுக்கான ஆடைகளை நேரம் செலவு செய்து தேடி எடுத்துக்கொள்வர்.

சிலர் ஆடை வாங்குவதற்கென்று வெளிநாடுகளுக்கும் செல்வதுண்டு. இது இவ்வாறிருக்கையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் கடதாசிகளினாலான திருமண உடைகளை தயாரித்துள்ளார்.

அஸ்யா கொசினா என்பவர் பண்டைய கால ஓவியங்கள் பற்றியும் மொங்கோலிய திருமண ஆடைகள் பற்றியும் படித்துள்ளார். இதனூடாக அவர், திருமண ஆடைகளை புதிதாக வடிவமைப்பதை பழக்கப்படுத்திக்கொண்டுள்ளார்.

தான் ஒரு நடன கலைஞராக வரவேண்டும் என்ற இலக்கில் இருந்தாலும் அவருக்கு நடந்த ஒரு விபத்தின் போது அவரது இலக்கை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இதன்பின்னரே அவரது கடதாசி மூலமான வடிவமைப்பு கலையை சேர்கசி என்ற பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
'இவ்வாறான கடதாசி மூலமான திருமண உடைகளை வடிவமைப்பதற்கான யோசனை, மொங்கோலிய ஆடைகளின் வடிவமைப்புக்கு பின்னரே எனக்கு தோன்றியது.

திருமணத்தின் போது, திருமண தம்பதிகள் அவர்களின் ஆடைகளை சரிசெய்துகொண்டு அமர முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பர். இந்த ஒரு காரணத்துக்காகவே இவ்வாறானதொரு கடதாசி திருமண ஆடையை நான் தயாரித்தேன்' என்று இந்த ஆடைகளை தயாரித்தவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .