Kogilavani / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதர்ச்சியடைந்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. இவர் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டனின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்.
சிறுநீருடன் இரத்தம் வெளியானதை தொடர்ந்து இவர் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்ட போதே இவருக்கு கர்ப்பப்பை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நோய் மிகவும் அரிதாக ஏற்படுமென்றும் இவ்வாறானவர்கள் வெளியில் ஆணுருபுடனும் உள்ளே பெண்களுக்கான கர்ப்பப்பையுடனும் காணப்படுவரென்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கர்பப்பயை சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றுவதற்கு உடன்படுமாறு வைத்தியர்கள் குறித்த நபரிடம் தெரிவித்துள்ளனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026