Kogilavani / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் பஸ் சேவை நிறுவனமொன்றில் பணி;யாற்றும் 22 ஊழியர்கள் காதல் ஜோடிகளாகி, ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்து, திருமண நாளன்று பஸ் ஒன்றிலேயே அவர்கள் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்ற நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஸெங்ஸோ எனும் நகரில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் மொத்தமாக 15 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிகளின் பயணத்திற்கான பஸ்ஸை அவர்கள் பணியாற்றும் நிறுவனமே வழங்கியிருந்தது.
'அவர்கள் எங்களது பஸ்களிலேயே முதன்முதல் சந்தித்துள்ளனர். பஸ்களிலேயே சந்தித்து காதல் கொண்டனர். அவர்களின் திருமண நாளுக்காக விசேட பஸ் ஒன்றை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறோம்' என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை, 'நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்சியடைகின்றோம். ஆனால் அவர்கள் தமது தேனிலவை வெவ்வேறு சமயங்களில் நடத்த இணக்கம் தெரிவித்தனர். இல்லாவிட்டால் எமது பஸ்களை இயக்குவதற்கு சாரதிகள் இல்லாமல் போய்விடுவார்கள்' எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago