2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

4 வயது சிறுமியின் உடல் முழுதும் கருமையான உரோமங்கள்

Kogilavani   / 2011 மார்ச் 02 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த 4 வயதான சிறுமியொருத்திக்கு உடல் முழுதும் கருமையான உரோமங்கள் படர்ந்து உடல் அழகையே கெடுக்கும் வண்ணம் காணப்படுகிறது.

மியாவோ என்ற மேற்படி சிறுமியின் தோலில் வளர்ந்திருக்கும் உரோமங்களை அகற்றுவதற்கு முடியாமல் அவளின் தாயான ஸீ கிஹுவா எனும் 25 வயதான  பெண் மிகவும் வேதனையுடன்  காணப்படுகின்றார்.

தனது மகள் அழகானவள் என்று அவர் கருதுகிறார். ஆனால், மற்றவர்கள் அவளது மகளை காட்டு விலங்கு போன்றவள் எனக் கூறுவதால் அவள்  மிகவும் மனமுடைந்து போயுள்ளாள்.

'அருகிலிருப்பவர்கள் எப்போதும் அவள் மனதை காயப்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றனர். அவளது பெயரை அழைத்து அவள் காட்டு விலங்கைப் போல் இருக்கின்றாள் என்று கூறுகின்றனர். அவர்கள் அவளை மிகவும் குரூரமாக  நடத்துகின்றனர்' என்கிறார்  ஸீ கிஹுவா.

கிஹுவாவும் அவரது கணவனும் மியாவோமியாவோவை அழைத்துக்கொண்டு கிராமத்திலுள்ள வைத்தியாசாலைக்குச் சென்றனர். மியாவோமியாவோவை பார்த்த வைத்தியர்கள் இது மெலனாமோ எனும் ஒரு வகை தோல் புற்றுநோய் என்பதை அறிந்துக்கொண்டனர்.

இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால் அவளது உயிருக்கே ஆபத்தாய் அமைந்துவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'மியாவோமியாவோ  3 மாதக் குழந்தையாக இருக்கும்போது அவளது முகம், முதுகு, மார்பு,  மற்றும் முழங்கைகளில் உரோமங்கள் வளர தொடங்கின. ஆரம்பத்தில் அது பிறப்படையாளமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவை மிக வேகமாக வளர ஆரம்பித்தது என ஸீ கிஹுவா தெரிவித்தார்.

' நாங்கள் எங்கள் நிலைமையை நினைத்து மிகவும் வருந்தினோம். எங்களது குடும்பத்தில் ஒருவருக்கும் இவ்வாறான ஒரு நிலைமை வந்ததில்லை. மியாவோமியாவோவுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். சத்திரசிகிச்சை அவளது வாழ்வை பாதுகாக்கும் என்று நாங்கள் நினைத்து அதற்கு ஒத்துக்கொண்டோம்' என அவர் கூறுகிறார்.

மியாவோமியாவோ 6 மாத குழந்தையாக இருக்கும்போது அவளுக்கு முதல் சத்திரசிகிச்சை நெற்றியிலும் முகதின் வலது புறத்தில் நடைபெற்றது. அதற்குப் பின்னரும் பல தடவைகள் சத்திர சிகிச்சை செய்தபோதிலும் பூரணமாக குணமடையவில்லை.

இந்நிலையில் மற்றொரு சத்திரசகிச்சைக்கு போதிய பணம் திரட்ட முடியாத அச்சிறுமியின் பெற்றோர் பிறரின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .