2021 ஜனவரி 23, சனிக்கிழமை

'ஆபாசத்தை' தினமும் 60 மில்லியன் பேர் பார்க்கின்றனர்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தினமும்  60 மில்லியன் மக்கள் ஆபாசப் புகைப்படங்களை பார்ப்பதாகவும் அதுவும்  அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ள கணினியின் மூலம் மறைமுகமாக மிகப்பெரிய ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அலுவலகத்தல் தமது இருக்கைகளில் இருந்தவாறே ஆபாசப் புகைப்படங்களை பார்ப்பதாக ஜேர்மனைச் சேர்ந்த பாலியல் நோய் சிகிச்சையாளர் டொக்டர் கிரிஸ்டோப் ஹெலர்ஸ் தெரிவித்துள்ளார்.

பேரிலினை தலைமயாக கொண்டு இயங்கி வரும் வைத்தியர் ஹெலர்ஸ் 'பாலியல் நடத்தை பிரச்சினைகளுக்கான மருந்துகளும் சிகிச்சை முறையும்' என்ற தொனிப்பொருளில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

'உலகில் தினமும் ஆபாசப்படங்களை பார்வையிடும் 60 மில்லியன் பார்வையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமது அலுவலக கணினியில் இதனை பார்வையிடுகின்றனர். இந்த தொகையானது சக்திவாய்ந்த குறிகாட்டியாக உள்ளது.

ஆபாச படங்களை பார்ப்பதென்பது உலகலாவிய நிகழ்வாகிபோனது.

இரண்டாவதாக அவர்கள் ஆபாசப்படங்களை நடுநிசியில் பார்க்கின்றனர்' என அவர் அந்த மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .