2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றுவதற்காக, வீட்டை விற்ற 62 வயதான பாட்டி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt62 வயதுடைய பெண்மணியொருவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளின் மூலம் உலகைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதற்காக 200,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான தனது வீட்டை விற்பனை செய்திருக்கிறார்.

சுயூ ஓ கிரேடி எனும் இந்த பெண், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய  இப்பயணத்திற்காக தன்னிடமுள்ள அனைத்து சொத்துக்களையும் பயன்படுத்தவுள்ளார் என யோர்க்ஷயர் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது குடும்ப உறுப்பினர்களது அச்சத்தைப் பார்த்து அந்த வயோதிப் பெண் சிரிக்கிறார்.

 

 

"எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது  என்று  அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை ஒரு தடவைதான். எனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நான் உச்சளவில் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன்" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

டொன்காஸ்டர், ஸ்புரெட்புரோவைச் சேர்ந்த முன்னாள் சிகையலங்காரக் கலைஞரான  அந்த வயோதிப பெண்,  6 அறைகள் கொண்ட தனது வீட்டை விற்பதில் எந்தவித தடுமாற்றமும் கொள்ளவில்லை. அவர் அவ்வீட்டில் 20 வருடங்களாக வசித்து வந்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் "நான் எனது வீட்டின் மீது மிகுந்த நேசம் கொண்டவள். நான் இந்த வீட்டில் நீண்ட காலம் வாழ்ந்துள்ளேன். எனக்கு தேவையானவற்றை இந்த வீட்டில் பெற்றுக்கொண்டேன். ஆனால் நான் எனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளையும் நான் நேசிக்கிறேன், ஆதனால் நான் இந்த வீட்டை விற்பதற்கு தீர்மானித்தேன்.

இந்த வீட்டை விற்பதன் மூலம் என்னால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும். உலகில் உள்ள விடயங்களை காணமுடியும். என்னால் 8 அல்லது 10 வருடங்களுக்குத் தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமானால் அது போதுமானது" எனத் தெரிவித்துள்ளார்.
 
ஓய்வுபெற்று விவாகரத்தான இப்பெண்ணுக்கு இரண்டு வளர்ந்த மகன்களும், நான்கு வயது நிறைந்த பேரப்பிள்ளையும் இருக்கின்றனர்.

அப்பெண்  தனது மோட்டார் சைக்கிளில் பிரிட்டன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரு லட்சம் மைல்கள் பயணம் செய்துள்ளார்.

'நான் கடந்த 5 வருடங்களில் அதிகமான மைல்கள் பயணம் மேற்கொண்டு விட்டேன். ஆனால் உலகின் ஏனைய பகுதிகளைக் காண்பதற்கு மிக ஆவலாகவுள்ளேன்' என்கிறார் அவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--