George / 2017 ஜூன் 02 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் இபாட் திட்டத்தின் கீழான அபிவிருத்தித் வேலைத்திட்டங்கள், விவசாயிகளுக்கு பயனற்றதாக காணப்படுகின்றன” என, விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இபாட் திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன வாய்க்கால்கள், கழிவுவாய்க்கால்கள், நீர்ப்பாசன வீதிகள் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில வேலைகள் தவிர, ஏனைய வேலைகள் தரமற்ற முறையிலும் விவசாயிகளுக்கு பயன்படாத விதத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதனைவிட, நீர்ப்பாசன வீதிகளில் சில கொங்கீறிட் வீதிகளாக புனமைக்கப்பட்டிருக்கின்ற போதும் அவ்வீதிகளில் இருமருங்களிலும் இரண்டு அடி அகலத்தில் கிரவல் மண் போடப்படவேண்டும் என ஒப்பந்தங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால், கிரவல் மண் அல்லாத தரம் குறைந்த வயல் மண் கொட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இதனைவிட, வாழ்வாதார உதவித்திட்டங்கள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு குறைபாடுகளும் முறைகேடுகளும் காணப்படுகின்றன. குறிப்பாக வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட கால்நடைகள் தரமற்ற கால்நடைகளாகவும் பண்ணையாளர்களுக்கு பயனற்றதாகவும் காணப்படுகின்றது” என்றனர்.
இரணைமடு குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கான வேலைத் திட்டம், இபாட் (ஐகுயுனு) நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2,890 மில்லியன் ரூபாய் இலகு கடனிலும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடனும் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
51 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
53 minute ago
1 hours ago