Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 டிசெம்பர் 16 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
நீண்ட காலமாகியும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்படாதிருந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் இன்னும் இரண்டு வாரங்களுள் வெளியிடப்படவுள்ளன.
கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியை முடித்து வெளியேறிய பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் சேவை உறுதிப்படுத்தல், சம்பள உயர்வு ஏதும் இன்றி பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்நோக்கி வந்ததுடன், தமது பெறுபேறுகளை விரைவாக வெளியிடுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அத்துடன், வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு முன்னால்,போராட்டம் நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வந்ததில் கவனம் செலுத்திய இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திடம் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரியதுடன் வெளியிடப்படாமைக்கான விளக்கத்தையும் கோரியிருந்தது.
அதற்கமைவாக, “இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும்” என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரனிடம் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து, தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்து, அன்றைய தினத்திலிருந்து தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் வழங்க உதவ வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட ஆசிரியர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago