Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் பொலிசாரினால் கடந்த ஒரு மாத காலமாக திருட்டுத்தனமாக மரங்களை வெட்டி எடுத்து வாகனங்களில் கொண்டு செல்லுவோர் குறித்த வாகனங்களுடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கமைய அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.நந்தன தலைமையில் உப பரிசோதகர் க.வினோத், பொலிஸ் உத்தியோகத்தர்களான றெதிச கருணாரட்ண கொடிகார, ரணவீர, தம்மிக்க, யானக, மென்டீஸ், சசிகாந்த ஆகியோர் மரங்கள் கடத்தியோரை கைது செய்ததுடன் கைது செய்வதவர்களை கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தி வருகின்றனர்.
அக்கராயன், ஆனைவிழுந்தான்குளம்; , வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து களவாக மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படும்போதே இக்கைதுகள் இடம் பெற்றுள்ளன.
இயற்கை வளங்களை அழிப்பவர்கள் தொடர்பாக பொலிசாருக்குத் தகவல் வழங்குமாறும் அக்கராயன் பொலிசார் அறிவித்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago