2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இராணுவத்தின் வசமுள்ள கேப்பாபிலவு காணிகள் ஜனவரியில் விடுவிப்பு

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி காணி, மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை கையளிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனவரி மாதம் இங்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியேற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதாகவும், அன்றையநாளில் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடமொன்றையும் ஜனாதிபதி திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கரைதுறைப்பற்று பிரதேச  செயலாளர் பிரிவிலுள்ள 300 பேருக்கு, காணி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .