2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இறால் பண்ணையால் மீனவர்கள் அவதி

Gavitha   / 2016 ஜூலை 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையினால், தாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த இறால் பண்ணையை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

எருக்கலம்பிட்டி கல்லடிப்பகுதியூடாக மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில்,  கடலேறியை குறுக்காக மறித்து சுமார் 3 கிலோ மீற்றர் வரையான பகுதியில் இறால் பண்ணையொன்று அமைக்கப்பட்டது. இந்த இறால் பண்ணையை அமைப்பதற்காக பாரிய மண் அணைக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளமையால், அப்பகுதியில் கடல் நீர் வற்றிய நிலையிலேயே காணப்படுகின்றது.

குறித்த பண்ணை, அரசியல் வாதிகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் தான் பாதிக்கப்பட்டுள்ளமையால் அதனை அகற்றுமாறு பல முறை அதிகாரிகளிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தும், குறித்த பண்ணை அகற்றப்படவில்லை என்று மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 400 மீனவ குடும்பங்கள் கடற்தொழிலில் ஈடுபடும் குறித்த பகுதி அடைக்கப்பட்டு இறால் பன்னையாக மாற்றப்பட்டுள்ளமையினால் குறித்த மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.மெராண்டவிடம் வினவிய போது,

'மீனவர்களின் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இறால் பண்ணையொன்றை அமைக்க வேண்டும் என்றால் அதற்கு கடற்றொழில் திணைக்களத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த அனுமதி கூட பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே இந்த இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .