2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது’

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இந்த அரசாங்கத்திலும், ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில், இன்று (02) நடைபெற்ற பொது அமைப்புகளுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,  யுத்த காலத்தில், 35க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செயயப்பட்டிருக்கிறார்களெனவும்  அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனவும் சாடினார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து கொண்டே தான் இருப்பதாக, சிவசக்தி எம்.பி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X