2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஓமந்தை அரச வீட்டுத்திட்ட காணிப் பங்கீட்டில் பிழை பிரதேசச் சபைத் தவிசாளர் குற்றச்சாட்டு

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

ஓமந்தை அரச வீட்டுத் திட்டத்தில், காணி பங்கீடு செய்வதில் பிழை ஏற்பட்டுள்ளதாக, வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரதேசச் சபைத் தவிசாளர் து. நடராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியா - ஓமந்தை வீட்டுத் திட்டத்தின் வீதி செப்பனிடும் பணிகளை, நேற்று (08) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வவுனியா நகரில், பல வீடுகள் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு இங்குக் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே, அவர்கள் இங்குள்ள காணிகள் தொடர்பில் அக்கறையின்றி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில், பிரதேச செயலாளரிடம் முறையிட்டள்ளதாகவும் அவர் கூறினார்.

சரியான முறையில் உத்தியோகத்தர்களை இனங்கண்டு, காணிகள் வழங்கப்பட்டிருந்தால் இன்று இந்தக் காணிகளில் பற்றைகள் வனந்திருக்காதெனத் தெரிவித்த அவர், வவுனியா நகரை அழகான இடமாகவும் மாற்றியிருந்திருக்கலாமெனவும் கூறினார்.

அத்துடன், ஏற்கெனவே கொடுக்கப்பட்டு, குடியேறாமல் உள்ள உத்தியோகத்தர்களின் காணிகளை, வீடுகள் மற்றும் காணிகள் இல்லாத மக்களுக்கு வழங்க வேண்டுமென, அவர் மேலும் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--