2025 ஜூலை 12, சனிக்கிழமை

’கைகொடுக்க நாங்கள் தயார்’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக் கொண்டு, சுயதொழில் முயற்சியாளர்களின் நலனுக்காக எமது அமைச்சின் கீழான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்தத்  விழிப்புணர்வுச் செயலமர்வு திட்டத்தின் மூலம் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் நலன்கருதி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மன்னார் நகர சபை மண்டபத்தில்,  தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்க மூட்டலுக்குமான விழிப்புணர்வு செயலமர்வு, இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய போது, இதனை தெரிவித்த அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கூறுகையில், “வன்னி மாவட்டம் யுத்தப் பாதிப்புக்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் சொந்தமாகவும், சுதந்திரமாக, சுயதொழில் செய்து வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சேவை நடாத்தப்படுகின்றது.

சுயதொழில் முயற்சியாளர்கள் தமக்கு ஏற்ற, தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்வதற்கு எமது அமைச்சு உதவும். அமைச்சின் கீழான நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் குடும்பச் சுமையைக் குறைக்கவும் முடியுமென நம்புகின்றோம்.

இந்த மாவட்டத்தில் தென்னை, பனை உள்ளிட்ட வளங்கள் தாராளமாக உள்ளன. அவற்றை பயன்படுத்த உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

கூட்டு முயற்சியின் மூலம் கூட்டுறவின் அடிப்படையில் அதனை உருவாக்கி பங்கு தாரர்களாக மாறுங்கள். அது நீண்ட காலம் நிலைக்கக்கூடிய முயற்சியாகும்.

இங்குள்ள பலருக்கு ஆற்றலும் திறமையும் இருந்தும் ஆதரவு கொடுக்க யாருமில்லாத நிலையில் நாங்கள் கைகொடுக்க முன்வந்துள்ளோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .