2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

‘கோட்டாவால் தரப்படும் அறிக்கையை ஏற்கமாட்டோம்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரைக்கேட்டாலே தாம் அச்சம் கொள்வதாகத் தெரிவித்த முல்லைதீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, அவரால் தரப்படும் காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான மரண அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவின் கடந்த கால செயற்பாடுகளை எண்ணி தற்போது அச்சத்துடன் இருப்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் குறித்து சர்வதேசம், புதிய ஜனாதிபதியுடனும் தம்முடனும் பேசி, ஓர் உண்மையானத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, யுத்தக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் தொடர்புடையவர் என்பதால், அவரிடமும் தாம் ஒரு வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்த அவர், அவரிடம் தான் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் முழுத் தகவல்களும் இருக்கின்றனவெனவும் கூறினார்.

தமது உறவுகளை அவரால் மாத்திரமே கண்டுபிடித்துத் தர முடியுமெனத் தெரிவித்த அவர், அத்தகைய ஓர் உணர்வுடனே இருப்பதாகவும் அதே வேளையில் மறுபுறத்தில் தாம் கடத்தப்படுவோமோ, கொல்லப்படுவோமா போன்ற அச்ச நிலையும் தமக்கு இருப்பதாகவும் கூறினார்.

தாம் அவருக்கெதிராக ஆயுதம் ஏதும் ஏந்திப் போராடவில்லையெனத் தெரிவித்த அவர், அவர்களிடம் கொடுத்த தமது உயிர்களையே தாம் அவரிடம் கோரி நிற்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .