Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - ஆனைவிழுந்தான்குளத்தில் இராணுவத்தினரால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டமொன்று மக்களின் பாவனைக்கு, செவ்வாய்க்கிழமை (26) கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 652ஆவது படைப்பிரிவினர் இக்குடிநீர்த் திட்டத்தை மக்களிடம் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் நெருக்கடி நிலவுகின்ற கிராமங்களில் ஒன்றாக ஆனைவிழுந்தான்குளம் கிராமம் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் 400 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே கரைச்சி பிரதேச சபையினால் குடிநீர்த் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை விட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர்த் திட்டத்துக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இக்கிராமத்தில் குடிநீர் நெருக்கடி தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் இராணுவத்தினரால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டமொன்றை மக்களின் பாவனைக்குக் கையளித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago